மாதகல் மண்ணின் புதிய குருமணி அருட்தந்தை பீ.அ.கமல்ராஜ் அடிகளாரின் முதல் நன்றித் திருப்பலி 14.04.2024 அன்று நடைபெற்றது.

மாதகல் மண்ணின் புதிய குருமணி அருட்தந்தை பீ.அ.கமல்ராஜ் அடிகளாரை 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதகல் பங்கு மக்களால் புனித தோமையார் திருச்சாெரூபத்திலிருந்து யா/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை மற்றும் யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயங்களின் மேலைத்தேய வாத்திய இசை முழங்க மாதகல் புனித தோமையார் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரது முதல் நன்றித் திருப்பலி ஒப்புக்காெடுக்கப்பட்டது.
இத்திருப்பலியில் மாதகல் பங்குத்தந்தை, மாதகல் மண்ணின் மைந்தர்கள், அருட்சகோதரிகள் மற்றும் மாதகல் மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர்.

 

கருத்துகள்