மாதகல் புனித தோமையார் ஆலயத்தின் கட்டம் - 4ற்கான புனருத்தாரன வேலைகளுக்கான வேலைத்திட்ட பெயர்ப்பலகை திருப்பலியைத் தொடர்ந்து மாதகல் பங்குத்தந்தையால் திறந்து வைக்கப்பட்டது.


வரலாற்றுப் புகழ்பெற்ற மாதகல் புனித தோமையார் ஆலயத்தின் புனருத்தாரன வேலைகளுக்கான நிதி சேகரிப்பு ஆலய மக்களின் மனமுவந்த நிதிப்பங்களிப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்டம் - 4
ஆலய வெளியக இரண்டு போட்டிக்கோ கைப்பக்கங்கள், ஆலய உள்ளக நடுப்பகுதி, ஆலய உள்ளக இரண்டு கைப்பக்கங்கள்
இறைமக்களின் விசுவாசத்தையும், வாழ்வையும் பாதுகாக்கும் நோக்கில் 1884ஆம் ஆண்டு புனித தோமையாரின் நாமத்தை தாங்கி கட்டப்பட்ட வரலாற்றுப் பெருமைமிகு மாதகல் புனித தோமையார் ஆலயம் இறைமக்களின் விசுவாச சாட்சியத்தின் அடையாளமாக வரலாற்றுப் பயணத்தின் 140ஆவது ஆண்டில் கால்பதித்து பெருமையுடன் மிளிர்கின்றது. பழமைவாய்ந்த இந்த ஆலயத்தை தற்போதைய காலத்திற்கு ஏற்புடையதாக புனரமைப்புச் செய்யவேண்டிய தேவை உள்ளதை அனைவரும் நன்கு அறிவீர்கள். யாழ்.மறைமாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற புனித தோமையார் ஆலயத்தை ஆலய கட்டடக் குழுவின் செயற்பாட்டுத் திட்டமிடல்களுக்கமைய உரிய காலங்களில் கட்டம் கட்டமாக புனரமைப்புச் செய்து புதுப்பொலிவுடன் பாதுகாப்பதற்கு ஆலய மக்களின் மனமுவந்த நிதிப்பங்களிப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வங்கிக் கணக்கு பெயர் - St.Thomas' Church Building Fund
வங்கிக் கணக்கு இல. - 8060121154
கொமர்ஷல் வங்கி, யாழ்ப்பாணம்
E-mail I.D. : st.thomaschurchmathagal0307@gmail.com
T.P.NO.: 021 224 1868 / 077 7122025 / 076 6868824
பங்குத்தந்தை,
மாதகல்

 மாதகல் புனித தோமையார் ஆலயத்தின் கட்டம் - 4ற்கான புனருத்தாரன வேலைகளுக்கான வேலைத்திட்ட பெயர்ப்பலகை 07.04.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பலியைத் தொடர்ந்து மாதகல் பங்குத்தந்தையால் திறந்து வைக்கப்பட்டது.
கருத்துகள்