அமரர்.நாகமணி சபாரத்தினம்
அந்தியேட்டி எதிர்வரும் 29ம் திகதி சுதுமலை குபேர மஹால் மண்டபத்தில் இடம்பெறும்.
. அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் இதனை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று மதியபோசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.றமேஸ் 0094777438277 

சுபா 0094774723504 

சாந்தன் 0094776984110
ஆவியாக ஆகாயத்தில் அங்கலாய்கிறேன்
பார் தனை விட்டு
பகலொன்று கழிந்தது
நேர் தனே சென்று
சிவன் பாதம்
சென்றிடலாம் என்று
எண்ணியிருந்தேன்
யார் வழி தடுத்தாரோ
யான் செய்த பாவம்
புண்ணிய பெறுபேறு எதுவோ
வார் தனில் மேலே
பதினெட்டடி உயரத்தில்
பாதை தடையை பார்க்கிறேன்
இது ஓர் இடைத்தங்கல் முகாமோ
கீழே எனக்கு நடக்கும் இறுதி
மரியாதைகளை பார்க்கிறேன்
ஊரெல்லாம் கூடி ஒன்று சேர்ந்து
அழுவது போல் காட்சி
எனக்கே விரும்பாத
எத்தனையோ நடைமுறைகள்
இறுதி கடன் எதுவோ
அதனை செய்தால் பரவாயில்லை
எந்திரன் படப்பிடிப்பு போல்
எத்தனை ஆரவாரம்
கண்ணீர் அஞ்சலிகள்
கட்டு கட்டாய்
அண்ணன் தம்பி
அயல் வீட்டார்
தனித்தனியாய்
சங்கங்கள் சபைகள்
சாலைகள் தனித்தனியாய்
நாற்பதினாயிரத்தில் நாலு
கோலப் பெட்டி ஒரு சோடி
பறை மேளம் ஊர் கோலத்திற்கு
போதும் இங்கோ இரு சோடி
பறை மேளம்
இதனை விட
இருபது பேரடங்கிய டம்போர்
இவற்றை எல்லாம் வெளிப்படுத்த
எத்தனையோ தொண்டர்கள்
எல்லாச் சந்திகளிலும்
இடைவிடா வார்த்தியங்கள்
பண்ணிசை பாட்டிற்கும்
புரோகிதர் கீர்த்தனையும்
புறம்போட்டு காட்டிட
ஒலிபெருக்கி சோடிக்கப்பட்ட
சோக கீதங்கள்
வீடியோ ஓடியோ
விதம் விதமாய் எடுப்பதுவும்
வேறு என்ன செய்கிறார்கள்
விளங்கவில்லை என்று
நானும் வியந்து நிற்க
வெளிநாட்டில் இருக்கும்
பிள்ளைகள் பார்ப்பதற்கு
‘ஸ்கைப்’ என்னும்
இன்னொரு ஏற்பாடு இவை
எல்லாம் எனக்கு தேவை தானா?
இவை எல்லாம் என்
விருப்பத்திற்கு மாறு
என்பது என் பிள்ளைகளுக்கு
தெரியாதா? நேர் தனில் சென்று
சிவம் பாதம் சேருவோம்
என்ற சிந்தனைக்கு ஓர்
தடையாக இவற்றை எல்லாம்
காண சிரிப்பு தான் வருகிறது
இத்தனை செலவுகளையும்
எளிதாக செய்து முடித்து
இல்லிடம் இல்லா
இருவருக்கு இருபது அடியில்
ஓர் குடிலை கட்டி கொடுத்திருக்கலாம்
என்று எண்ணி
ஆவியாகி நின்று யானும்
ஆகாயத்தில் அங்கலாய்கிறேன்
க.நா. சபாரத்தினம்
மாதகல்
கருத்துகள்