விபுலானந்தர் வீதி மாதகல் - கனடாவைச் சேர்ந்த திரு. முத்துலிங்கம் சத்தியசீலன் அவர்களின் நிதிப் பங்களிப்பில்..!

விபுலானந்தர் வீதி மாதகல் - கனடாவைச் சேர்ந்த திரு. முத்துலிங்கம் சத்தியசீலன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தால் கல்வி உதவி தேவைப்படுவோருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 23.03.2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு திரு. சிவசொரூபன் (சமூக சேவை உத்தியோகத்தர்) அவர்களும் மாதகல் பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களும் யா/ பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அதிபர், மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றாேர்கள் கலந்து காெண்டிருந்தனர்.
ஒன்பது இலட்சத்து நாற்பதாயிரம் (940, 000/=) செலவில் மாதகலைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் நலனில் அக்கறை காெண்டு இவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நாேக்குடன் கற்றல் உபகரணங்களிற்கான முழு நிதிப் பங்களிப்பினையும் வழங்கிய விபுலானந்தர் வீதி மாதகல் - கனடாவைச் சேர்ந்த திரு. முத்துலிங்கம் சத்தியசீலன் அவர்களிற்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு இவரது பணி மென்மேலும் தாெடர இறைவனைப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.

 

கருத்துகள்