பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் 7ஆவது வருடாந்த நிகழ்வாக..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் 7ஆவது வருடாந்த நிகழ்வாக  2024ஆம் ஆண்டிலும் 5ஆம் வகுப்பு மாணவர்களின் மேலதிக  புலமைப்பரீட்சை வகுப்புக்களை மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையில் நடாத்தி  வருகின்றது.

     கல்விச் செல்வத்தினை வளர்த்திடும் திட்டத்தில் ஒரு பகுதியாக, எமது சங்கம்   5 ஆம் வகுப்பு புலமைப்பரீட்சை மாணவர்களிற்கு மேலதிக, விசேட வகுப்புக்களை நடாத்திட 2017ஆம் ஆண்டிலிருந்து ஒரு இலட்சம் [1,25,000]ரூபா வரை வருடாந்தம் வழங்கி  வருகின்றோம்.
 
 இந்த வகுப்புக்களில் பங்கு கொள்ள விரும்பும், மாதகல் கிராமத்தில் வசிக்கும் 5ஆம் வகுப்பு மாணவர்கள்  இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 

கருத்துகள்