மாதகல் ஐக்கிய விளையாட்டுக் கழகம் பெருமையுடன் நடாத்தும் 'மாதகல் பிறீமியர் லீக் - 04"ஆரம்ப நாள் நிகழ்வில் இரண்டாவது போட்டியில் வேளாங்கன்னி மாதா அணியை எதிர்த்து லூர்து மாதா அணி மோதியது...!

07/04/2024(Sunday)9.30am நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வேளாங்கன்னி மாதா அணியை எதிர்த்து லூர்து மாதா அணி மோதியது
ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடத்திலேயே யேந்தனால்(வே.மாதா) கோல் போடப்பட்டது. சற்று நிமிடத்திலேயே யேந்தனால் (வே.மாதா) மீண்டும் ஒரு கோல் போடப்பட்டு ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்தனர் வேளாங்கன்னி மாதா அணியினர். மேலும் கோல்கள் ஏதுமின்றி நிறைவு பெற்றது முதல் பாதியாட்டம்.
இரண்டாம் பாதியாட்டம் ஆரம்பித்து மீண்டும் விஸ்வாவால்(வே.மாதா) கோல் ஒன்று போடப்பட 03-00ஆனது. பின்னர் மீண்டும் தனேஸ் (வே.மாதா) அவர்களால் கோல் போடப்பட 04-00ஆகியது. இறுதி நேரத்தில் வேளாங்கன்னி மாதா அணியின் பின்கள வீரரால் தவறான உதை ஒன்று கிடைக்க அது மஞ்சள் அட்டை காண்பித்து தண்ட உதையாக வழங்கப்பட்டது. இருப்பினும் அது கம்பத்தின் வெளியே அடிக்கப்பட பலனின்றி போக ஆட்டம் நிறைவடைந்தது. வேளாங்கன்னி மாதா அணி 04-00 என வெற்றி பெற்றது.
வேளாங்கன்னி மாதா அணி
யேந்தன்
விஷ்வா
தனேஸ்
ஆட்ட நாயகன். விஷ்வா
04-00







புதிய நிர்வாக ஒழுங்கமைப்பில் புதிய சீசனுக்கான முதலாவது போட்டி
06/04/2024(சனிக்கிழமை) இடம்பெற்ற முதலாவது போட்டியில் வேளாங்கன்னி மாதா அணியை எதிர்த்து மடுமாதா அணி விளையாடியது. பரபரப்பான முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளுக்கும் சந்தர்ப்பங்கள் பல கிடைத்த போதிலும் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தால் முறியடிக்கப்பட்டது. ஆட்டத்தின் சில நிமிடங்களில் தவறான உதை (பவுல்)ஏற்பட்டு நடுவரால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு தண்ட உதை (பெனால்டி) வழங்கப்பட அதை கோலாக மாற்றினார் நிசாந்தன்(வே.மாதா அணி) பாதியாட்டம் நிறைவடைய 01-00என முன்னிலை வகித்தது வேளாங்கன்னி அணி.
இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே அஜித்குமார்(மடுமாதா அணி) கிடைத்த பந்தை கோலாக மாற்றி ஆட்டத்தை சமன் செய்ய மீண்டும் ஆட்டம் சூடு பிடித்தது. சில நிமிடங்களில் மடு மாதா அணி பின்கள வீரரால் தவறான உதை (பவுல்) ஏற்பட்டு நடுவரால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு தண்ட உதை (பெனால்டி) வழங்கப்பட அனுஸ்ரன் (மடு மாதா) அதை கோலாக மாற்றினார். மேலும் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட போட்டி 02-01என முடிவு பெற்றது.
மடு மாதா அணி 02
வேளாங்கன்னி மாதா அணி 01
ஆட்டநாயகன்
ஜெனோறாஜ்(G.k. மடு மாதா)










06.04.2024 அன்றைய நாள் MPL 04 ஆரம்ப நாள் நிகழ்வுகளும் மைதானம் மற்றும் வீரர்களுக்கான ஆசீர்வாதமும் சில பதிவுகள்...










 

கருத்துகள்