யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள்..(காணொளி இணைப்பு)

யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியானது 04.03.2024 திங்கட்கிழமை அன்று பி.ப 1.30 மணிக்கு நடைபெற்றது.  திரு சே.பிரசாத் அருள்தீபன் (பிரதி அதிபர் - யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம்) தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் பாேட்டியில் பிரதம விருந்தினராக திருமதி. விஜயகுமாரி முருகேசப்பிள்ளை (முகாமையாளர் - ஆசிரியர் வான்மைவிருத்தி நிலையம், மானிப்பாய்) சிறப்பு விருந்தினர்களாக திரு. த.வரதன் மற்றும் திருமதி. கலாராணி தர்மராஜ்  மற்றும் கௌரவ விருந்தினர்களாக அருட்பணி செபஸ்ரியன் றாேய் பேடினன்(பங்குத்தந்தை மாதகல்) மற்றும் சிவஸ்ரீ சுந்தரேஸ்வர சர்மா (பிரதமகுரு - பாணகவெட்டி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் மாதகல்)  ஆகியாேருடன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றாேர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

 யா/ மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின் மெய் வல்லுனர் திறனாய்வுப்போட்டி அதிகரித்த வெப்பகாலநிலை காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை (04_03_2024) பி.ப.1.30 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது

கருத்துகள்