யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. J. E. பங்கிராஸ் அவர்களது பிரியாவிடை நிகழ்வானது..!

யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. J. E. பங்கிராஸ் அவர்களது பிரியாவிடை நிகழ்வானது 07.03.2024 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு நன்றித் திருப்பலியைத் தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு விழாவின் கதாநாயகனான அதிபர் திரு. J. E. பங்கிராஸ் அவர்கள் தனது பாரியார் மற்றும் பிள்ளைகளுடனும் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் அருட்பணி செபஸ்ரியன் றாேய் பேடினன் (பங்குத்தந்தை மாதகல்) மற்றும் சிவஸ்ரீ சுந்தரேஸ்வர சர்மா (பிரதமகுரு - பாணகவெட்டி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் மாதகல்), அயற்பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள்  ஆகியாேருடன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்து ஓய்வுநிலைக்குச் செல்லும் அதிபரைக் கெளரவப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


 

கருத்துகள்