யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திரு. சுப்பிரமணியம் புஸ்பரங்கன் அவர்கள் நியமனம்..!

யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திரு. சுப்பிரமணியம் புஸ்பரங்கன் (இலங்கை அதிபர் சேவை - தரம் ౹౹) அவர்கள் இன்றைய தினம் தனது கடைமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாடசாலையின் மாணவர்கள் கல்வி, ஒழுக்கம், இணைப்பாடவிதான செயற்பாடுகள் யாவற்றிலும் சாதனை படைத்திடவும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படவும் வழிப்படுத்தவல்ல ஆற்றலும் ஆளுமையும் மிக்க அதிபரை வாழ்த்தி வரவேற்று நிற்கின்றது பாடசாலை சமூகம்.

மாதகல் மண்ணின் மாணவச் செல்வங்களை ஆளுமை மிக்க தலைவர்களாக மாற்றும் பாரிய பொறுப்பை ஏற்று யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக வருகை தந்திருக்கும் திரு. சுப்பிரமணியம் புஸ்பரங்கன் அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம் !

 

கருத்துகள்