காவடி கந்தன் என போற்றி வழிபாடாற்றப்படும் மாதகல் நுணசை முருகனின் மெய்சிலிர்க்க வைக்கும் நேர்த்திக்கடன் காவடிகள், தீர்த்தத்திருவிழா நிகழ்வுகளும்..!
























































































































































































முதலாம் திருவிழாவின் பதிவுகள்...



மாதகல் நுணசை முருகமூர்த்தி தேவஸ்தானம் வயல்கள், நுணா மரங்கள் மத்தியில் அமைந்தமையால் நுணசை எனப் பெயர் கொண்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்னர் தானாக தோன்றிய கடம்பமரத்தை விருட்சமாக கொண்டு கடம்பனுக்கு கோயில் அமைக்கப்பட்டது என வரலாறுகள் கூறுகின்றன.

நுணசை முருகமூர்த்தி ஆலயமானது மூர்த்தியாக வேற்படையையும் விருட்சமாக கடம்பமரத்தையும் தீர்த்தமாக ஏழு குண்டுகள் நிறைந்த குளத்தையும் கொண்டுள்ளது. பல பக்தர்கள் தமது நேர்த்திக்கடன் தீர்ப்பதற்கு பல வித காவடிகள் எடுப்பது வழமை.
#காவடிக்கு புகழ் பெற்ற கந்தன். அயல் கிராமங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் மக்கள் திரளாக வருகை தந்து தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர். சித்திரா பௌர்ணமியை தீர்த்தமாக கொண்டு 12 தினங்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
மாதகல் - நுணசையம்பதி -திருவருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி தேவஸ்தானம் குரோதி வருஷ மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2024

மாதகல் நுணசையம்பதி முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் நான்காம் திருவிழா இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது 🙏 எதிர்வரும் திங்கட்கிழமை (22/04/2024) தேர்திருவிழா நடைபெற்றவுள்ளது, இதில் தமது நேர்த்திக்கடன்களை காவடிகள் எடுத்துச் செலுத்துவார்கள். நூற்றுக்கு மேற்பட்ட பறவைக்காவடிகளும், ஆட்டக்காவடிகளும் மற்றும் பல காவடி வகைகளும் (நட்சத்திர காவடி, தேர் காவடி, முள்ளு சப்பாத்து காவடி என்று பலவகையான காவடிகள்) இந்த கோவில் தேர் திருவிழா நாள் அன்று நடைபெறவுள்ளது

கருத்துகள்