கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் யாழ் மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 03.03.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நெடுந்தீவு தொடக்கம் கட்டைக்காடு வரை...
கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் யாழ் மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 03.03.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நெடுந்தீவு தொடக்கம் கட்டைக்காடு வரையுள்ள மீனவர்களுடன் இணைந்து இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் உள்நுழைந்து தமது கடல்வளங்களை அழிப்பதையும், தமது வாழ்வாதார உபகரணங்களை சேதப்படுத்துவதுடன் அழித்தொழிப்பதையும் கண்டித்து மாதகல் பிரதேச மீனவர்களால் கறுப்புக்கொடி தாங்கிய 100ற்கும் மேற்பட்ட படகுகளில் மாதகல் கடற்கரையிலிருந்து இலங்கை-இந்திய எல்லைவரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.