பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் வருடாந்த உதவியாக, எமது கிராமத்தின் கல்வி வளர்ச்சியின் ஒரு பகுதியாக, மாதகலில் இயங்கும் 5 முன்பள்ளிகளின்..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் வருடாந்த உதவியாக, எமது கிராமத்தின் கல்வி வளர்ச்சியின் ஒரு பகுதியாக, மாதகலில் இயங்கும் 5 முன்பள்ளிகளின் 11 ஆசிரியர்களிற்கு வழங்கவென  ஒரு இலட்சத்து முப்பத்திரண்டாயிரம் [1,32,000] ரூபாவினை 15-02-2024அன்று கணக்காளர் வங்கி மூலம் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்திற்கு அனுப்பி வைத்தார். 

இந்த நிதியினை 17ஆவது வருடாந்த நிகழ்வாக நடாத்தப்பட்ட, 5ஆம் வகுப்பு புலமைப்பரீட்சையில் 2023ஆம் ஆண்டு சித்தியடைந்த மாதகல் மாணவர்களின் கௌரவிப்பு விழா நடைபெற்ற ஞாயிறு 18-02-2024 அன்று மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையில் வைத்து, நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு மு.ஞானசீலன் அவர்களால்  முன் பள்ளி ஆசிரியர்களிடம் வழ்கப்பட்டது. 

இந்நிகழ்வில் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு ச.அருள்ஞானானந்தன் அவர்கள், செயலாளர் திரு மு.திருக்குமார் அவர்கள், கணக்காளர் திரு செ. சுபாஸ்கரன் அவர்களும் கலந்து கொண்டனர்.


















 

கருத்துகள்