யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் கந்தசாமி அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் கதிரசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

கயூரதன், கயூரதி, துசாகரன், புவிதரன், அனிதா, பகீரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இரத்தினேஸ்வரி, செல்வராணி, வசந்தகுமார், விஜயகுமார், நந்தகுமார், காலஞ்சென்ற வசந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்லத்துரை, சண்முகலிங்கம், விமலாதேவி, மகேஸ்வரி, உஷாநந்தினி, காலஞ்சென்ற வள்ளியம்மை, சரஸ்வதி, சுந்தரலிங்கம், ஞானேஸ்வரி, திருநாவுக்கரசு, நாகராசா, ருக்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிலீத்திரா, ஸ்ரீதரன், துவாரகா, சமேதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜக்சிகா, டிலக்சன், ஜெய்வின், சாம்ராட், டேவான், ஷான்வி, ஜானவன், விஹான், ஆறுஸி, ஏய்டன், அன்சன், ஆர்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

 கயூரதன் – மகன்
 துசாகரன் – மகன்
 கயூரதி – மகள்
 அனிதா – மகள்
 டிசாந்தன் – மருமகன்
 பகீ – மகன்
 இரத்தினேஸ்வரி – சகோதரி
 வசந்தன் – சகோதரன்
 விஜயன் – சகோதரன்
 நந்தன் – சகோதரன்






மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் கந்தசாமி அவர்கள் மாதகலில் 26.02.2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


 இவர் இரத்தினேஸ்வரி,செல்வராணி,வசந்தன், விஜயன், நந்தன் ஆகியோரின் அன்பு சகோதரர் ஆவார். 

அன்னாரது பூதவுடலை இல.148 பிரதான வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள E-son's மலர்ச்சாலையில் (https://maps.app.goo.gl/yodgGtQFZaNkBJMU9) 27.02.2024 செவ்வாய்கிழமை காவை 10:00 மணி முதல் 12:00 மணி வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்


கனடாவில் இருந்து யாழ் வந்தவர் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் மரணம்
மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.கனடாவில் வசிக்கும் சோதிலிங்கம் கந்தசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாதகல் கிழக்கு, மாதகல் என்ற முகவரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்றையதினம் மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.