பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் 17ஆவது வருடாந்த நிகழ்வாக நடாத்தப்பட்ட 5...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் 17ஆவது வருடாந்த நிகழ்வாக நடாத்தப்பட்ட 5ஆம் வகுப்பு புலமைப்பரீட்சையில் 2023ஆம் ஆண்டு சித்தியடைந்த மாதகல் மாணவர்களின் கௌரவிப்பு விழா ஞாயிறு 18-02-2024 அன்று மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வுகள் அனைத்தும் கல்வி அபிவிருத்தி சங்கத் தலைவர் அருள் ஞானானந்தன் தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்வில் மாதகல் பங்குத் தந்தை திரு றோய் பேடினன் அடிகளார் அவர்கள், திரு கஜநேசக்குருக்கள் அவர்கள், விக்னேஸ்வரா பாடசாலையின் அதிபர் செல்வி சுலோசனா அவர்கள், சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபர் திருமதி ஜெ.வெ.றமணி அவர்கள், பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு மு.ஞானசீலன் அவர்கள் , இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு ச, அருள்ஞானானந்தன் அவர்கள், செயலாளர் திரு மு.திருக்குமார் அவர்கள், கணக்காளர் திரு செ. சுபாஸ்கரன் அவர்கள், பாடசாலைகளின் ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் இக் கௌரவிப்பு நிகழ்வினை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக 2006ஆம் ஆண்டு முதல் நடாத்தி வருகின்றது. அத்துடன் 5 ஆம் வகுப்பு புலமைப்பரீட்சை மாணவர்களிற்கு மேலதிக,விசேட வகுப்புக்களை நடாத்திட 2017ஆம் ஆண்டிலிருந்து ஒரு இலட்சம் [1,00,000]ரூபா வரை வருடாந்தம் உதவி வருகின்றோம்.
2023ம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் வகுப்பு புலமைப் பரீட்சையில் 9 மாணவர்கள் சித்தியடைந்து எமது கிராமத்திற்கு பெருமை சேர்த்தனர். இன்றைய நிகழ்வில் இம்மாணவர்கள் ஒவ்வொருவரிற்கும் பாராட்டுப்பட்டயம் வழங்கி கௌரவித்ததுடன் பத்தாயிரம்[10,000] ரூபாவும் அவர்களின் பெயரில் வங்கியில் வைப்பிலிடப்பட்டது.
மேலதிக வகுப்புக்களின் ஆசிரியரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.
• மாதகல் விக்னேஸ்வரா பாடசாலை : 7 மாணவர்கள்
• மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை : 2 மாணவர்கள்
இம்மாணவர்களிற்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களிற்கும், அவர்களை வளர்த்தெடுத்த பெற்றோர்களிற்கும் இம்மாணவச் செல்வங்களிற்கும் எமது சங்கம் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
அதேவேளை மாதகலைச் சேர்ந்த திரு பொன்னம்பலம் அவர்களும் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக ஒவ்வொரு மாணவரிற்கும் ஆயிரம்[1000] ரூபாவினை இந்நிகழ்வில் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : மாதகல் கிராமத்தில் வேறு மாணவர்கள் இப்பரீட்சையில் சித்தி அடைந்திருந்தால் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
