புட்டும் மாதகல் முரல்மீன் சொதியும் | மாதகல் கடலில் இரவில் முரல் வேட்டை காணொளி பதிவுகளை பார்வை இடலாம்…!

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதிகளில் முரல் மீன் படுகை அதிகரித்துள்ளது. வருடாந்திர மாசி மகத்தினை தொடர்ந்து முரல் மீன் படுகை அதிகரிக்கும். அது சுமார் ஒரு மாத காலத்திற்கு மேலாக முரல் படுகை அதிகமாக காணப்படும். இந்த மாதகல் முரலுக்கு என ஒரு தனி சுவை உண்டு என கூறுவார்கள். முரல் படுகை காலத்தில் தொழிலுக்கு செல்லும் கடற்தொழிலாளர்கள் , "தேயிலை வடி" போன்ற ஒன்றினை வீசி கடலின் மேல் துள்ளி குதிக்கும் முரல்களை பிடிப்பார்கள். பிடித்து கரைக்கு கொண்டு வரும் முரல்களை கரையில் காத்திருப்போர் உடனேயே கொள்வனவு செய்து செல்வார்கள். ஒரு மீன் 100 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும். உடனே பிடித்து கொண்டு வரும் மீனின் சுவை மிக அதிகம் என சுவைத்தவர்கள் கூறுகின்றனர். அதனால் தினமும் இரவு 7. 30 மணி தொடக்கம் 8.30 மணி வரையில் முரல் மீன் வாங்க யாழின் பல பாகங்களிலும் இருந்தும் பலரும் வருவதனால் மாதல் மேற்கு கடற்கரை பகுதிகள் இரவு வேளைகளில் களைகட்டுகிறது.

கருத்துகள்