மாதகல் புனித லூர்து அன்னையின் திருச்சொரூபத் தேர்ப்பவனியும், திருப்பலிநிகழ்வின் காணொளி பதிவுகளை பார்வை இடலாம்…!

16.02.2024 வெள்ளி மாலை 6.00 மணிக்கு மாதகல் புனித தோமையார் ஆலயத்திலிருந்து புனித லூர்து அன்னையின் திருச்சொரூபத் தேர்ப்பவனியும், திருப்பலியைத் தொடர்ந்து நற்கருணை வழிபாடும், பவனியும் இறுதியில் நற்கருணை ஆசீரும் இடம்பெறும். 17.02.2024 சனி காலை 7.00 மணிக்கு திருவிழாத் திருப்பலி யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்பணி. கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெறும். அன்னையின் திருவிழாத் திருப்பலிகள் பின்வரும் இணையத்தளங்கள் ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்படும். Mathagal.com (www.youtube.com/mathagal) Tamil Best (www.facebook.com/TamilBest.lk) Tamil Best (www.youtube.com/tamilbestlk) புனித லூர்து அன்னையின் பரிந்துரை வழியாக இறைவனின் ஆசீர் பெற்று வளமுடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
மாதகல் புனித லூர்து அன்னை திருத்தலத் திருவிழா - 2024 நேரலை இணைப்பு >>> அன்னையின் கொடியேற்றத் திருப்பலியானது 08.02.2024 மாலை 4.45 மணிக்கு நேரலையாக mathagalcom,Tamilbest உத்தியோகபூர்வ யூடியுப் (youtube) தளத்தில் ஒளிபரப்பப்படும். நேரலையாக திருப்பலியினை கண்டுகளித்து அன்னையின் ஆசீரை பெறுவீர்களாக. புனித லூர்து அன்னையின் பரிந்துரை வழியாக இறைவனின் ஆசீரைப் பெற்றுவாழ அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்துகள்