டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக..!

டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன்

 இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக 
ஞாயிறு 02 பங்குனி 2024 முதல் க. பொ. த. சாதாரண தர [G.C.E. O.L.] வகுப்பு மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் [ தமிழ்-கணிதம்-ஆங்கிலம்-  விஞ்ஞானம்-வரலாறு] இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்க அலுவலகத்தில் ஆரம்பமாக உள்ளது.

                இதற்குரிய நிதி இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் [2,50,000]ரூபாவினை இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்புக்களில் பங்கு கொள்ள, எமது மாதகல் கிராமத்தினைச் சேர்ந்த மாணவர்கள் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்க அலுவலகத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

எதிர்கால மாணவர்களின் கல்விச் செல்வத்தினை வளர்த்திட ஒவ்வொரு வருடமும்  இந்த வகுப்புக்கள் நடாத்தப்படவுள்ளது.


 

கருத்துகள்