மாதகல் நலன்புரிச் சங்க அனுசரணையில், பிரான்ஸ் மாதகல் நலம்புரிச் சங்க நிதியுதவியில் மாதகல் தெற்கு J/151 கிராம செயலக நீர் வழங்கல் வேலைகளுக்கு நிதியுதவிகள்..!

 

 மாதகல் நலன்புரிச் சங்க அனுசரணையில், பிரான்ஸ் மாதகல் நலம்புரிச் சங்க நிதியுதவியில் மாதகல் தெற்கு J/151 கிராம செயலகத்தின் நீர் வழங்கல் வேலைகளுக்காக மாதகல் கலைமகள் சன சமூக நிலையத்திற்கு ரூபா 181480/= வழங்கும் நிகழ்வு 12.01.2024 ஆம் திகதி காலை 11மணிக்கு மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகத்தில் உப தலைவர் திரு. ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது. இறை வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வினை தொடர்ந்து ஆசியுரையினை மாதகல் பங்குத்தந்தை அருட்பணி செ.றோய்பேடினன்  நிகழ்த்தினர். தொடர்ந்து மாதகல் உப தலைவர் திரு.தி.ஐங்கரன் அவர்களின் தலைமையுரை ஆற்றப்பட்டதுடன் மாதகல் நலன்புரிச் சங்கத்தினதும் வெளிநாட்டு சங்கங்களினதும் செயற்பாடுகள் விடயமாகவும் எடுத்துக் கூறப்பட்டது. மாதகல் நலன்புரிச் சங்க செயலாளர் திரு.மா.ஜெறாட் அவர்களால் செயற் திட்டங்களின் முன்னெடுப்புகள் விடயமாகவும் இதனால் மக்கள் அடையும் பயன்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து மாதகல் கலைமகள் சன சமூக நிலையத்திற்கு நீர் வழங்கல் செயற் திட்டத்திற்கான நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் மாதகல் கிராம பிரிவுகளின் கிராம அலுவலர்கள் மாதகல் நலன்புரிச் சங்க நிர்வாகத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்