புதிய ஆண்டை எதிர்கொண்ட நிலையில் மாதகல் நலன்புரிச் சங்கத்தால் 2024 ஆம் ஆண்டின் முதல் செயற்திட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள்..!

புலர்ந்த 2024 ஆம் ஆண்டின் முதற் செயற்திட்டங்களாக மாதகல் நலன்புரிச் சங்கத்தால் கிராம மக்களினதும் ,கிராம மேம்பாடு கருதியும் செயற் திட்டங்களுக்கான நிதியும், விசேட தேவையுடையவர்களுக்கான ஊன்றுகோல்களும் (walkingstick)12.01.2024 ஆம் தேதி அன்று மாதகல் நலன்புரிச் சங்கத்தில் வைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு மாதகல் நலன்புரிச் சங்க உப தலைவர் திரு.தி.ஐங்கரன் தலைமையில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் மாதகல் நலன்புரிச் சங்க செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், மாதகல் பங்குத்தந்தை, மாதகல் கிராமம் சார் 3 கிராம அலுவலர்கள் மற்றும் பயன் பெறுபவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
1) J/151 கிராம செயலக நீர்வழங்கல் பிரான்ஸ் மாதகல் நலன்புரி சங்கம் 181480 ரூபா

2) புனித தோமையார் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான கொடுப்பனவு. கனடா மாதகல் நலம்புரி முன்னேற்ற ஒன்றியம் 180000 ரூபா

3) யா/மாதகல் விக்னேஸ்வரா வித்யாலய நூலக கூடாரை திருத்தம் கனடா மாதகல் நலம்புரி முன்னேற்ற ஒன்றியம். 200000 ரூபாய

4) விசேட தேவையுடையவர்களுக்கான ஊன்றுகோல் வழங்கல். S.ரதிமணி(மணி) உதவும் கரங்கள் கரவெட்டி. மூன்று கிராம அலுவலக பிரிவுகளின் 35 பயணிகளுக்கு வழங்கப்பட்டது













 

கருத்துகள்