மாணவர்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கிவைப்பு..!

மாதகல் நுணசை முருகன் ஆன்மீக அறக்கட்டளையின் கோரிக்கைக்கிணங்க புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்க ஆன்மீக அறக்கட்டளைப் போசகரும் பொறியியலாளருமாகிய திரு ஞானசின்னையா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமெரிக்காவில் வசிக்கும் பொறியியலாளர் திரு ஈஸ்வரன் அவர்களின் நிதி அனுசரணையில்  மாதகலைச் சேர்ந்த ஐந்து முன்பள்ளி மாணவர்களுக்கும் மூன்று ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்குமாகச் சேர்த்து மொத்தமாக 400 மாணவர்களுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள்  01.12.2013 வெள்ளிக்கிழமை அன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழவில் தென்னை பயிற்செய்கை சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைத்தனர்.
 

கருத்துகள்