மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈச்சரத்தில் சம்புநாதப்பெருமானுக்கு திருக்குடத்திருமஞ்ச நிகழ்வுகளின் காணொளி பதிவுகளை பார்வை இடலாம்…!

வரலாற்று பெருமைமிகு கடல் கொண்ட மாதகல் சம்புநாத ஈச்சரத்தில் சிவனுடைய திருவுருவம் நிறுவப்பட்டு இன்று பத்து வருடங்கள் நிறைவு.
அகில இலங்கை சைவமகா சபையால் நிறுவப்பட்டது.
01.12.2013 - 01.12.2023


புதுப்பொலிவுடன் திருக்குடமுழுக்குக்கண்டார் மாதகல் சம்புநாதப்பெருமான்
மாதகல் சம்புநாத ஈச்சரத்தில் சைவமகாசபையினரால் கடந்த பத்துவருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பெற்ற திருவுருவம் தற்போது மீளவும் நிறந்தீட்டப்பெற்று புதுப்பொலிவுடன் திருக்குடமுழுக்கு செய்யப்பெற்றது.
மாரிமழை மெல்லன தூறிட, மாதகல் கடலலைகள் பெங்கியெழ, தமிழ் மந்திரங்கள் முழங்க,அடியார்களின் திருமுறை ஓதலும் அரோகரா ஆர்ப்பரிப்புடனும் சம்பநாதப்பெருமானுக்கு திருக்குடமுழுக்கு நடைபெற்றது.
புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு என்ற வாக்கிற்கமைய எம்பெருமானுக்கு அடியார்கள் சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் என்ற திருமுறையோடு பூவும் நீரும் கொண்டு போற்றிவணங்கினர்.
"சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற்றேன்பெற்ற
தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே"
திருச்சிற்றம்பலம்


வரலாற்று பெருமைமிகு கடல் கொண்ட மாதகல் சம்புநாத ஈச்சரத்தில் அகில இலங்கை சைவ மகாசபையால் நிறுவப்பட்ட இறை சிவனுடைய திருச்சொரூபத்திற்கு பத்து ஆண்டு நிறைவில் திருமஞ்சனம் ஆட்டும் நிகழ்வு நாளை கார்த்திகை வெள்ளி 01.12.2023 மாலை 3.30 முதல் இடம்பெறவுள்ளது..

சுழிபுரம் சிவ அன்பர்களின் அனுசரனையில் மீள வர்ணம் தீட்டப்பட்டு புது மெருகுடன் ஆதிசிவன் நாளை சுற்றியுள்ள கிராம சிவதொண்டர்களின் பங்கேற்புடன் இந்துமா சமுத்திர தீர்த்தால் பக்தர்கள் திருக்கரங்களால் 30அடி உயரமான சடாமுடியிலிருந்து திருமஞ்சனம் செய்யப்படவுள்ளார்
அனைத்து சிவனடியார்களும் ஒன்றே குலமாக தம் திருக்கரங்களால் அப்பனை பத்து ஆண்டுகளிற்கு முன் நீராட்டியது போன்று இம்முறையும் செய்ய முடியும்.

திரு மஞ்சன நீராட்டு கிரியைகள் சிவத்திரு அகோரசிவம் உமையரசு ஐயாவினால்  ஆற்றப்பட இருக்கின்றது
புண்ணியம் செய்வோருக்கு பூ உண்டு நீர் உண்டு என்ற திருமந்திரத்திற்கு இணங்க பூவோடும் நீரோடும் இறை சிவனை அர்சிக்க சிவனடியார்களை அன்போடு அழைத்து நிற்கின்றோம்.
அகில இலங்கை சைவ மகா சபை

கருத்துகள்