உங்கள் அபிமான எம் இணையத்தளம் உருவாகி பதின்மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து தற்போது பதிநான்காம் ஆண்டில்..!
உங்கள் அபிமான எம் இணையத்தளம் உருவாகி பதின்மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து தற்போது பதிநான்காம் ஆண்டில்..!

மாதகல் நெற் இணையத்தின் அன்பான வாசகர்களே!

உங்கள் அபிமான எம் இணையத்தளம் உருவாகி  பதின்மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து தற்போது பதிநான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது என்பதை உங்களுக்கு அன்போடு அறியத்தருகிறோம்.

நாம் அந்நிய தேசத்தில் ஆங்காங்கே பரந்து வசித்து வந்தாலும், எம் சிந்தையில் என்றென்றும் இருப்பது எம் மாதகல் மண்ணின் நினைவுகளும், உணர்வுகளும், உறவுகளும் தான்.
நாம் இவ் இணையத்தினை உருவாக்கியதின் நோக்கமே எம்மவர்களுக்கும், எம் மண்ணிற்குமான தொடர்பினை நாம் ஒருபோதும் இழந்து விடக்கூடாது என்பதற்காகவே...
இது வரை காலமும், எம்மால் முடிந்த சேவையினை எம்மூருக்கும், உறவுகளுக்கும் வழங்கி வருகிறோம்.
எந்த ஒரு விடயமாயினும்,குறை நிறைகளை சார்ந்து இருக்கும். அதேபோன்று, எம் இணையத்தின் சேவையின் குறைகளை எமக்கு எடுத்துக்கூறி, மென்மேலும் திறம்பட , துரிதமாக எம் இணையம் செயற்பட உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை.
அதேவேளையில், எம் இணையம் தரப்பில் ஏதாவது தவறுகள் இருப்பின், நாம் உங்களிடம் மனதார மன்னிப்பு கேட்கின்றோம்.

மற்றும், எமது ஊரில் இடம்பெறும் நிகழ்வுகளின் புகைப்படங்களையும், காணொளிகளையும், தகவல்களையும் உடனுக்குடன் எடுத்து தடைதாமதமின்றி தந்துதவுபவர்களுக்கும், மாதகல்கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்து உலகளாவியரீதியில் வசிக்கின்ற மாதகல் உறவுகள், நலன்புரிச்சங்கங்கள், இளையோர் அமைப்புகளும் ஏனைய நாடுகளில் வதியும் எமது இணையத்தினை தினமும் பார்வையிடுகின்ற எமது 
அன்பு மிகுந்த நெஞ்சங்களே,உங்களுக்கு எமது கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.


கருத்துகள்