அறிவுக்களஞ்சிய போட்டியில் மாதகல் சென் யோசவ் மகா வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டு அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழும்..!

மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் வலிகாமம் கல்வி வலயத்தால் தரம் 10,11 இல் நீருயிரின வளத் தொழில் நுட்பவியல் பாடம் கற்கும்  மாணவரிடையே அறிவுக்களஞ்சிய போட்டி நடாத்தப்பட்டது. இப்போட்டியில், யா/மாதகல் சென் யோசவ் மகா வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டனர்.
அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழும் சர்வதேச கடற்புல் தினமாகிய மார்ச் 01 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது. 
இந்நிகழ்வில் எம்மூர்  மாணவச்செல்வங்களும் பங்குபற்றி வெற்றிபெற்றது எம்மவருக்கும்,  எம் கிராமத்திற்கும் பெருமையே.
எம் சிறார்களின் சாதனை பற்றி நம் இலங்கை பத்திரிகையான "வீரகேசரி" கூட எடுத்துக்கூறியுள்ளது .
இவர்களுடைய சாதனை பயணம் தொடர்ந்திட  எம் மனமார்ந்த  வாழ்த்துக்கள்.
 

Partager:  

Commentaires