களைகட்டும் முரல் மீன் திருவிழா - சுற்றுலா ரீதியாக பிரபலமாகும் மாதகல் கடற்கரை..!

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதிகளில் முரல் மீன் படுகை அதிகரித்துள்ளது.  வருடாந்திர மாசி மகத்தினை தொடர்ந்து முரல் மீன் படுகை அதிகரிக்கும். அது சுமார் ஒரு மாத காலத்திற்கு மேலாக முரல் படுகை அதிகமாக காணப்படும்.  இந்த மாதல் முரலுக்கு என ஒரு தனி சுவை உண்டு என கூறுவார்கள்.  முரல் படுகை காலத்தில் தொழிலுக்கு செல்லும் கடற்தொழிலாளர்கள் , "தேயிலை வடி" போன்ற ஒன்றினை வீசி கடலின் மேல் துள்ளி குதிக்கும் முரல்களை பிடிப்பார்கள்.  பிடித்து கரைக்கு கொண்டு வரும் முரல்களை கரையில் காத்திருப்போர் உடனேயே கொள்வனவு செய்து செல்வார்கள். ஒரு மீன் 100 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும்.  உடனே பிடித்து கொண்டு வரும் மீனின் சுவை மிக அதிகம் என சுவைத்தவர்கள் கூறுகின்றனர்.  அதனால் தினமும் இரவு 7. 30 மணி தொடக்கம் 8.30 மணி வரையில் முரல் மீன் வாங்க யாழின் பல பாகங்களிலும் இருந்தும் பலரும் வருவதனால் மாதல் மேற்கு கடற்கரை பகுதிகள் இரவு வேளைகளில் களைகட்டுகிறது. 


யாழ்ப்பாணத்தின் மீனவக் கிராமமான மாதகலில் மாசி மாதம் தொடக்கம் இடம்பெறும் முரல் மீன் திருவிழா அப்பிரதேச
மீனவமக்களின் ஒரு பாரம்பரியமான வழக்காறாகும் (traditional custom).
முரல் மீன்களில் (Garfish /needle fish)
வாளையா முரல் (வாளா முரல்), வரயி முரல், கருமுரல், பிள்ளை முரல், கோழியாமுரல், பாம்பு முரல், செல்ல முரல், இரங்க முரல், கலிங்க முரல், நெடு முரல், பாசி முரல், பரவை முரல், கட்ட முரல் என பலவகைகள் உள்ளன .
இதில் மாதகலில் பிடிபடும் முரல்கள் Half beak என்ற அரை அலகு வகையைச் சேர்ந்தவை. யாழ்ப்பாணத்தில் இது ஒரு சொண்டன் முரல் என்று அழைக்கப்படுகின்றது. இந்த வகை மீன்களில் கறுப்பு நிறமான கீழ்த்தாடை மட்டும் கூர்மையாக நீட்டிக் கொண்டு நிற்கும்.
மீனவர்களால் கடலில் பிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்படும் முரல் மீன்கள் விலை கூறி விற்கப்பட்டு பொது மக்களால் வாங்கப்படுவதுடன் உடனடியாகவே சமைத்து உண்ணப்படுகின்றது. கரையிலுள்ள பொதுமக்களின் கேள்விக்கேற்ப ரூபா. 100 இலிருந்து 200 வரை விலை வேறுபடும்.
இது தனித்துவமாக 'மாதகல் முரல்' என்றும் அழைக்கப்படுகின்றது .
விசேடமாக முரல் மீன் சொதியுடன் கோதுமைமா பிட்டு அல்லது வெள்ளைப் பச்சை அரிசிச் சோறுடன் இணைந்து மிகவும் ருசியான உணவாக உண்ணப்படுகின்றது.
நீங்களும் ஒரு நாள் சென்று பாருங்கள்...
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் விசேட அம்சமாக காணப்படுகின்ற முரல் மீன்பிடி அதிகரித்த காலமாக இம்மாதம் காணப்படுகின்ற நிலையில் முரல் மீன் விற்பனை அதிகரித்த நிலையில் மாதகல் மேற்கு கடற்கரை இரவு நேரங்களில் விழாக்கோலம் கொண்டு காணப்படுகின்றது.

மாதகல் கடற்பரப்பில் பிரிக்கப்படுகின்ற முரல் மீன் தனித்துவமானதும் சுவை வாய்ந்ததுமாக காணப்படுகின்ற நிலையில் அதிகளவானோர் குறித்த கடற்பரப்பிற்கு தமது குடும்பங்களுடனும் நண்பர்களுடனும் வருகை தருகின்றனர்.

மாதகலில் களைகட்டும் முரல் மீன் திருவிழா! சுற்றுலா ரீதியாக பிரபலமாகும் மாதகல் கடற்கரை (photos) | Srilanka Jaffna Tourism

படகுகளில் பிடித்து வரப்படும் மீனை கரையில் உடனடியாகவே கொள்வனவு செய்கின்ற நிலையும் பின் மீனவர்கள் மீள உடனடியாக முரல் மீன் பிடிக்க கடலிற்கு செல்வதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

ஒரு மீன் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் வடமாகாண சுற்றுலா பணியகம் இக்காலப்பகுதியினை மாதகல் பகுதியினை சுற்றுலாவிற்கு உகந்த காலமாக அடையாளபடுத்தியுள்ளார்கள். இதே நிலையில் குறித்த பகுதியில் கரம் சுண்டல் உட்பட்ட பல உணவு வகைகளும் பிரதேச வாசிகளால் விற்பனை செய்யபடுகின்றன.
Partager:  

Commentaires