J/150 மாதகல் கிழக்கு கிராம சேவையாளர் திரு. ஜேம்ஸ் பொப்ளர் அவர்களின் பணியிட மாற்றத்தினை முன்னிட்டு அவர் மாதகல் மண்ணிற்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவையினைப் பாராட்டி..!

எமது கிராமத்தில் கடந்த 7 வருடங்களாக மாதகல் கிழக்கு J/150 கிராம சேவையாளராக பணிபுரிந்து இடமாற்றலாகிச் செல்லும் கிராமசேவையாளரின் சேவை நலன் பாராட்டு விழாவிற்கான முழுச் செலவினையும் திரு.பூ.அன்பழகன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.



















இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
விழா அனுசரணை : பூ.அன்பழகன் மாதகல் மேற்கு (ஜேர்மனி)


 சேவைநலன் பாராட்டு விழா

கடந்த ஏழு வருடங்களாக எம் மாதகல் கிராமத்தில் J/150 கிராம சேவையாளராக பணிகள் பலபுரிந்து இடமாற்றலாகி சாவல்கட்டுJ/131 கிராம சேவையாளராகச் செல்லும் கிராம அலுவலர் ஜேம்ஸ் பொப்ளர் அவர்கள் சிறந்த ஆளுமைமிக்க ,நாடிவரும் மக்களின் நிலையறிந்து சேவை செய்யும் சேவையாளன். தனது கடமை நேரத்தில் அலுவலகத்தில் இருப்பதைவிட தனது கடமை நேரத்தினைத் தாண்டியும் மக்களிடையே சென்று களப்பணிகள் பல ஆற்றி எம் கிராமத்தின் முன்னேற்றத்திற்கு ஊன்றுகோலாக நின்று உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
இவர் எம் கிராமத்திற்கு ஆற்றிய சேவைதனை பாராட்டி வாழ்த்துவதோடு செல்லும் கிராமத்திலும் இவரது சேவை சிறக்க வாழ்த்தி நிற்கின்றோம்.

 

Partager:  

Commentaires