05 ஆவது வருடாந்த நிகழ்வாக « பசுமையில் மாதகல் » எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இலவச மரநடுகைத் திட்டம்..! | mathagal.net 05 ஆவது வருடாந்த நிகழ்வாக « பசுமையில் மாதகல் » எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இலவச மரநடுகைத் திட்டம்..! - mathagal.net -->

05 ஆவது வருடாந்த நிகழ்வாக « பசுமையில் மாதகல் » எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இலவச மரநடுகைத் திட்டம்..!

5ஆவது வருடாந்த நிகழ்வாக « பசுமையில் மாதகல் » எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இலவச மரநடுகைத் திட்டம்

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையுடன் எமது தலைமைச் சங்கமான இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் வருடாந்த நிகழ்வாக நடாத்தி வரும் "பசுமையில் மாதகல்" எனும் நிகழ்வு மாதகல் நலன்புரிச் சங்க வளாகத்தில், மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு வி. சிற்றம்பலம் அவர்களின் தலைமையில்  ஞாயிறு 20-11-2022 அன்று சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் சுடரினை சிறப்பு விருந்தினர் வலி/தென்மேற்கு பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகஸ்தர் திரு வே. அருந்தவராசா அவர்களும், மாதகல் கிராமத்தின் J/150, J/151, J/152 கிராம சேவையாளர்களான  திரு ஜேம்ஸ் பொப்ளர் அவர்களும், திரு விக்னபவன் அவர்களும், திரு  சுஜீவன் அவர்களும், மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு அருள்ஞானானந்தன் அவர்களும், வலி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு மகேந்திரம் அவர்களும், மாதகல் நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சிற்றம்பலம் அவர்களும், மாதகல் நலன்புரிச் சங்க உறுப்பினர், மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் கணக்காளர் திரு சுபாஸ்கரன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

        அமைதி இறை வணக்கத்தை தொடர்ந்து, வரவேற்புரையினை மாதகல் நலன்புரிச் சங்க உறுப்பினர் திருமதி ம. லக்சிக்கா அவர்கள் ஆற்றினார். தலைமையுரையினை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு சிற்றம்பலம் அவர்களும், திட்டம் தொடர்பான வெளிப்பாட்டு உரையினை மாதகல் நலன்புரிச் சங்கச் செயலாளர் திரு மா. ஜெறாட் அவர்களும் நிகழ்த்தினர்.

தொடர்ந்து சிறப்புரையினை நிகழ்வின் சிறப்பு விருந்தினர் வலி தென் மேற்கு பிரதேச செயலக சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு வே. அருந்தவராசா அவர்கள் நிகழ்த்தினார்.

மாதகல் பாடசாலைகள், முன்பள்ளிகள் ரீதியாக பசுமையில் மாதகல் செயற்திட்டத்தினை மையமாக வைத்து நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரைப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களிற்கும், 2021 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களிற்கும், முன்பள்ளி மாணவர்களிற்கும் வழங்கப்பட்ட மரக்கன்றுகளின் தற்போதய நிலவர மதிப்பீடுகளின் அடிப்படையில் , முதல் மூன்று இடங்களையும் பெற்ற பாடசாலைகள், முன்பள்ளிகளிற்கு பரிசில்களும், நினைவுச் சின்னங்களும் நிகழ்வின் சிறப்பு விருந்தினராலும், நிகழ்வில் கலந்து கொண்ட முதன்மையாளர்களினாலும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களால் மூன்று பயனாளிகளிற்கு சம்பிராயபூர்வமா நிகழ்வில் வைத்து மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வின் முக்கிய அம்சமாக பாடசாலை மாணவர்களும். முன்பள்ளி மாணவர்களும் மரநடுகையினை மையப்படுத்திய வாசக சுலோகங்களை  கைகளில் ஏந்தி நிற்க நிகழ்வில் கலந்து கொண்ட  சிறப்பு விருந்தினர்கள, மற்றும் முதன்மையாளர்களால் மாதகல் நலன்பரிச் சங்கத்தில் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டதுடன், மரக்கன்றுகளிற்காக பதிவு செய்யபபட்டவர்களிற்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப மா, பலா, எலுமிச்சை, தோடை, தென்னை, கமுகு, கஜு, கொய்யா, யம்பு, சமண்டலை அம்பரல்லா கன்றுகளுடன், தோட்டக் கன்றுகளான கத்தரி, மிளகாய், மற்றும் பயிற்றை, வெண்டி விதைகளும் வழங்கப்பட்டது.

J/150 கிராம அலுவலர் பிரிவில் 206 குடும்பங்களிற்கும், J/151 கிராம அலுவலர் பிரிவில் 67 குடும்பங்களிற்கும், J/152 கிராம அலுவலர் பிரிவில் 45 குடும்பங்களிற்கும் என மொத்தமாக 318 குடும்பங்களிற்கும், மற்றும் பொது அமைப்புகளிற்கும் வழழங்கப்பட்டது.

தொடர்ந்து நன்றியுரையினை மாதகல் நலன்பரிச் சங்கத்தின் உப செயலாளர் திருமதி கோமதி அவர்கள் நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், முன்பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாதகல் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள், பயனாளிகள், அரச, அரச சார்பற்ற பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

       எமது கிராம மக்களிற்கு இலவசமாக, பயனுள்ள, மரக்கன்றுகளை வழங்கியதன் மூலம், எமது பூமித்தாய்க்கு ஓர் சிறிய உதவியினை  செய்யும் அதேவேளை, அவர்களின் குடும்பங்களும் பயன்பெறுவதை எண்ணி நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். 

இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம்

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம்
விழா அழைப்பிதழ் - « பசுமையில் மாதகல் » பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் நடாத்தும் 5 ஆவது வருடாந்த நிகழ்வாக « பசுமையில் மாதகல் » எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இலவச மரநடுகைத் திட்டம் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரனையுடன் எமது தலைமைச் சங்கமான இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் வருடாந்த நிகழ்வாக நடாத்தி வரும் "பசுமையில் மாதகல்" எனும் நிகழ்வினை இந்த வருடம் ஞாயிறு 20-11-2022 அன்று நடாத்திட முடிவு செய்துள்ளது. எமது கிராம மக்களிற்கு இலவசமாக, பயனுள்ள, மரக்கன்றுகளை வழங்குவதன் மூலம், எமது பூமித்தாய்க்கு ஓர் சிறிய உதவியினை செய்யும் அதேவேளை, அவர்களின் குடும்பங்களும் பயன்பெறுவதை எண்ணி நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
05வது வருடார்ந்த பசுமையில் மாதகல் மரநடுகைத் திட்ட நிகழ்வை நோக்காகக் கொண்டு 13/11/2022ஆம் திகதி ஞாயிறு காலை 10:30 மணிக்கு யா/ மாதகல் சென் தோமஸ் றோ. க. பெண்கள் பாடசாலையிலும், யா/ மாதகல் ஜோசப் மகா வித்தியாலயத்திலும் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்க நிதி அனுசரணையில் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் நடத்தப்பட்டது. 

இதில் முன்பள்ளி மாணவர்களுக்கு வயது ரீதியாகவும் பாடசாலை மாணவர்களுக்கு தரம் ரீதியாகவும் நடாத்தப்பட்ட போட்டிகளில் 171 மாணவர்கள் பங்கு பற்றியதுடன் போட்டிக்கான மேற்பார்வையாளர்களாக மாதகல் கிராம மட்ட பாடசாலை ஆசிரியர்களுடன் நலன்புரிச் சங்க பிரதிநிதிகளும் மேற்கொண்டனர்  இதன் மதிப்பீடுகள் மாதகல் கிராமம் தழுவிய அயற்பாடசாலை தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குழாமினால் மதிப்பீடுகள் செய்யப்பட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு 20/11/2022 ஆம் திகதி ஞாயிறு காலை 09:00 மணிக்கு மாதகல் நலன்புரிச்சங்கத்தில் நடைபெறும் பசுமையில் மாதகல்  நிகழ்வின்போது பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.
மாதகல் கிராமத்தை பசுமை எழில்மிகு கிராமமாக்கும் தூரநோக்கு செயற்பாட்டு திட்டமான பசுமையில் மாதகல் செயற்பாட்டு திட்டத்தை நோக்காக கொண்டு நடாத்திய போட்டிகளின் ஊடாக மாணவர்களின் ஆழ்மனங்களில் பதிவுகளை ஏற்படுத்தி நாம் வாழும் சூழலின் மகத்துவத்தை உணர்ந்து மாதகல் கிராமத்தை பசுமையாக்கும் இவர்களின் பங்கேற்பும் பங்களிப்பும் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை


போட்டிகளில் பங்கு பற்றுவதற்கு பெயர், விவரங்களை சமர்ப்பித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் முன்பள்ளி மாணவர்கள் 13.11.2022 ஞாயிறு காலை 10.00 மணிக்கு போட்டி நடைபெறும் பாடசாலைக்கு போட்டி தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு முன் ஆயத்தத்துடன் சமூகம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
போட்டிகள் நடைபெறும் பாடசாலைகள்
யா/ மாதகல் சென்தோமஸ் றோக பெண்கள் பாடசாலை: முன்பள்ளி மாணவர்கள், தரம் 1, 2 ,3 ,4 ,5 மாணவர்கள்
யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம்: தரம் 6 ,7, 8 ,9 ,10 ,11. க.பொ.த உயர்தர மாணவர்கள்
நிர்வாகம்: மாதகல் நலம்புரிச் சங்கம்

2022ஆம் ஆண்டின் 5 ஆவது வருடாந்த "பசுமையில் மாதகல்" நிகழ்வு பற்றிய முக்கிய அறிவித்தல் : 

மாதகல் கிராமத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, இலவசமாக மரக்கன்றுகளை பெறுவதற்கு, பதிவு செய்யும் நாட்களை மேலும் 3 நாட்களை ஒதுக்கியுள்ளது என்பதை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகல் வாழ் மக்களிற்கு அறியத் தருகின்றது.


பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் நடாத்தும் 5 ஆவது வருடாந்த நிகழ்வாக « பசுமையில் மாதகல் » எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இலவச மரநடுகைத் திட்டம்-20-11-2022


பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரனையுடன் எமது தலைமைச் சங்கமான இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் வருடாந்த நிகழ்வாக நடாத்தி வரும் "பசுமையில் மாதகல்" எனும் நிகழ்வினை இந்த வருடம் 20-11-2022 அன்று நடாத்திட முடிவு செய்துள்ளது.
        
       எமது கிராம மக்களிற்கு இலவசமாக, பயனுள்ள, மரக்கன்றுகளை வழங்குவதன் மூலம், எமது பூமித்தாய்க்கு ஓர் சிறிய உதவியினை  செய்யும் அதேவேளை, அவர்களின் குடும்பங்களும் பயன்பெறுவதை எண்ணி நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். 

மரங்களை முன்கூட்டியே பதிவு செய்வதற்கு குடும்ப அட்டை அல்லது ஆள் அடையாள அட்டையுடன் வரவும். பதிவின் போது தரப்படும் பதிவுத்துண்டின் படி மரங்கள் வழங்கப்படும்.

இடம்:இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகம்
[ மாதகல் கிழக்கு கிராம சபை 150 அலுவலகத்திற்கு அருகாமையில்]

பதிவு செய்யும் திகதிகள் : செவ்வாய் 08, புதன் 09,வியாழன் 10-11-2022 

நேரம் : காலை 9 மணி - 11 மணி, மாலை 2மணி 30 - 5 மணி பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் நடாத்தும் 5 ஆவது வருடாந்த நிகழ்வாக « பசுமையில் மாதகல் » எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இலவச மரநடுகைத் திட்டம்-20-11-2022


பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரனையுடன் எமது தலைமைச் சங்கமான இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் வருடாந்த நிகழ்வாக நடாத்தி வரும் "பசுமையில் மாதகல்" எனும் நிகழ்வினை இந்த வருடம் 20-11-2022 அன்று நடாத்திட முடிவு செய்துள்ளது.  

       எமது கிராம மக்களிற்கு இலவசமாக, பயனுள்ள, மரக்கன்றுகளை வழங்குவதன் மூலம், எமது பூமித்தாய்க்கு ஓர் சிறிய உதவியினை  செய்யும் அதேவேளை, அவர்களின் குடும்பங்களும் பயன்பெறுவதை எண்ணி நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். 

மரங்களை முன்கூட்டியே பதிவு செய்வதற்கு குடும்ப அட்டை அல்லது ஆள் அடையாள அட்டையுடன் வரவும். பதிவின் போது தரப்படும் பதிவுத்துண்டின் படி மரங்கள் வழங்கப்படும்.

இடம்:இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகம்

[ மாதகல் கிழக்கு கிராம சபை 150 அலுவலகத்திற்கு அருகாமையில்]

பதிவு செய்யும் திகதிகள்: வெள்ளி 04, சனி 05, ஞாயிறு 06-11-2022 

நேரம் : காலை 9 மணி - 11 மணி   மாலை 2மணி 30 - 5 மணி

Aucun commentaire:

Enregistrer un commentaire