கொடிய நோயான கொரோனா தோற்று, போர் நிமித்தம் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் அதி உச்ச விலையுர்வு என அன்றாடம் மனிதர்கள் தம் இயல்பு வாழ்க்கையினை நேர்கொள்வதற்கு இன்று போராடி வருகின்றனர். தாம் உச்சி வெயிலிலும், கடும் மழையிலும், வியர்வை சிந்தி உழைத்து இவ் உலகத்தின் பசி போக்கும் விவசாயிகளின் நிலையோ இன்னமும் கொடுமையானது. அவ்வகையில், எம் மாதகல் விவசாயிகளின் நன்மை கருதி , வி.சிற்றம்பலம் ஐயாவின் வேண்டுகோளுக்கு இணங்க எம் மண்ணைச் சார்ந்த மற்றும் தற்போது, ஜேர்மனியில் வசிப்பவருமான திரு பூ.அன்பழகன் அவர்களின் நிதிப் பங்களிப்புடன், மாதகல் விவசாய சம்மேளனமூடாக மாதகலில் சிறுதானிய பயிர்ச்செய்கை ஊக்குவிக்கும் முகமாக விவசாயிகளுக்கு உழுந்து பயிர்ச்செய்கைக்காக 4 பரப்புக்கான விதை உழுந்து வழங்கப்பட்டன. அன்றைய தினம் விதை வழங்கப்பட்டவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படும் என கூறப்பட்டதன் பேரில் 05/08/2022 அன்று கொடுப்பனவு செய்யப்பட்டது.
திரு பூ.அன்பழகன் அவர்களுக்கு எம் கோடானு கோடி நன்றிகளை நாமும் எம் மண் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் எம் மண்ணின் மேன்மைக்காக அரும்பாடு படுபவர்களில் ஒருவராவார். இவரது சேவை மனப்பான்மையினை பாராட்டி வாழ்த்துகிறோம்.
Commentaires
Enregistrer un commentaire