மாதகல் சென் யோசப் மகாவித்தியாலய பரிசளிப்பு விழா 15.07.2017 சனிக்கிழமை அன்று அதிபர் திரு J.E.பங்கிராஸ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது…!

பிரதம விருந்தினராக முன்னாள் ஆசிரியர் திருமதி.புஸ்பராணி சிவனேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக பிரம்மஶ்ரீ.செ.சுந்தரேஸ்வரசர்மா (பிரதமகுரு பானாகவெட்டி ஶ்ரீபுவனேஸ்வரி அம்பாள் ஆலயம்)அவர்களும் வண.பிதா.R.H.சகாயநாயகம் அடிகளார் (பங்குத்தந்தை மாதகல்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.மாணவர்களின் மேலைத்தேய வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இட்பெற்று பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்களுக்கான மதிய போசனமும் இடம்பெற்றது….. (மேலும்…)

யா/ மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தில் கொண்டாட்டப்பட்ட ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்…!

ஆடிப்பிறப்பு நிகழ்வு…. (மேலும்…)

யா/மாதகல் சென் யோசப் மகாவித்தியாலய மாணவன் செல்வன் யேசுதாசன் அலக்ஸ் றொனிஸ்ரன் 2017 ஆம் ஆண்டுக்கான மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான 100m தடைதாண்டல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார்…!

அதிபர் உபஅதிபர் பொறுப்பாசிரியர் மாணவனின் தந்தையுடன் வெற்றிபெற்ற மாணவன், பாடசாலை விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் திரு.ச.சரூசன் அவர்களின் அயராத முயற்சியின் அறுவடையே இவ்வெற்றி மாணவனுக்கும் ஆசிரியருக்கும் பாடசாலை சமுகத்தின் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். மேலும் இவ்வாறான சாதனைகளுக்கு பக்கபலமாக இருந்துவரும் புலம்பெயர் நாடுகளில் வாழும் எம் மண்னின் உறவுகளால் நடத்தப்படும் சங்கங்களின் நிர்வாகத்தினரும் உறுப்பினரும் எமது பாடசாலைக்கு வருகைதந்து ஊக்கமளித்து வருகிறனர். இவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்..
அத்துடன் வெற்றி பெற்ற மாணவனுக்கு நாமும் எமது இணையத்தினூடாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்…. (மேலும்…)

யா/ மாதகல் சென்.யோசப் மாகாவித்தியாலயத்தில் இடம் பெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வுகள்…!

05.06.2017அன்று சிறப்பான முறையில் அதிபர் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன… (மேலும்…)

மாதகல் சென் யோசப் மகாவித்தியாலய அணியினர் 2017 ஆம் ஆண்டுக்கான வலிகாம கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றி…!

இரண்டாம் இடம் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை வழிப்படுத்திய பாடசாலை ஆசிரியர்கள்,மாணவசெல்வங்கள் மற்றும் பெற்றோருக்கும் எம் இணையம் சார்பாக வாழ்த்தி பாராட்டுகின்றோம்… (மேலும்…)