மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி 5வயது மாணவர்களது பிரியா விடை நிகழ்வுகள் 27/11/2016அன்று காலை 9மணியளவில் முகாமைத்துவக் குழு ஆதரவுடனும், பெற்றோர் தலமையிலும் ஐந்து வயதுடைய மாணவர்களுக்கான பிரியாவிடை வெகு சிறப்பாக நடைபெற்றது. விருந்தினர்களாக விக்னேஸ்வரா ஆசிரியர் சுரேக்கா அவர்களும் ,சித்தி விநாயகர் முன்பள்ளி முகாமைத்துவக் குழு முன்னாள் பொருளாளர் சுசாகரன் அவர்களும் ,சென் தோமஸ் முன்பள்ளி ஆசிரியர் அருள் சகோதரி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்…!

முகாமைத்துவ குழுவினரின் வேண்டுதலுக்கு இணங்க ஐந்து வயதுடைய மாணவர்களின் பங்களிப்புடனும், மாதகல் இணையத்தளத்தின் நிதி உதவியுடனும் ஒலி பெருக்கி சாதனம் வாங்கி முன்பள்ளிக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது… (மேலும்…)

மாதகல்நெற் இணையத்தளத்தின் நிதியுதவியுடன் 2016ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மாதகல் கல்வி அபிவிருத்திச்சங்கத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்…!

இம்மாணவர்கள் கல்வியினை நன்றாக பயின்று மென்மேலும் தமது வாழ்வுதனில் சாதனைகள் பல புரிந்து வெற்றி பெற எம் மாதகல்நெற் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்திக்கொள்கிறோம்… (மேலும்…)

மாதகல்நெற் இணையத்தளத்தின் நிதியுதவியுடன் 2016ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாதகல் சென் தோமஸ் றோ. க பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனுக்கு பாடசாலை உபகரணங்கள் மாதகல் கல்வி அபிவிருத்திச்சங்கத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டார்…!

இவர் கல்வியினை நன்றாக பயின்று மென்மேலும் தமது வாழ்வுதனில் சாதனைகள் பல புரிந்து வெற்றி பெற எம் மாதகல்நெற் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்திக்கொள்கிறோம்… (மேலும்…)

————————————-ஏழாவது அகவையில்—————————

(மேலும்…)

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒன்றுகூடலில் கௌரவிப்பு நிகழ்வுகள்…!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒன்றுகூடலில் 09-10-2016 அன்று இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தையும், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தையும் ஆரம்பித்தவர்களில் ஒருவரும், இன்றும் இருபது வருடங்களாக முன்னின்று, எமது கிராமத்திற்கு செய்த, செய்து வரும் சேவைகளை பாராட்டி இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு சிற்றம்பலம் ஆசிரியர் அவர்கள் ” மாதகல் மாமனிதன்” என கௌரவிக்கப்பட்டார்…

(மேலும்…)