இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் சேந்தாங்குளம் கடற்கரையில் அமைக்கப்பட்ட 'வெளிச்சவீடு' திறப்புவிழா நிகழ்வுகள்..!

கோலாகலமான திறப்புவிழா கண்டது " வெளிச்சவீடு"
எமது கழகத்தினால் சேந்தாங்குளம், மாதகல், குசுமான்துறை முதலான பகுதி மீனவர்களின் நன்மைகருதி அமைக்கப்பட்ட 52 அடி உயரமான 17 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்ப்பட்டு, அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 4.5 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிச்ச விளக்கு பொருத்தபட்ட வெளிச்சவீடானது நேற்றையதினம் (29-02-2020) சம்பிரதாய பூர்வமாக, யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் மற்றும் விசேட அதிதிகோளுடு இனிதே திறந்துவைக்கப்பட்டது!
பொதுமக்கள், கடற்றொழிலாளர்கள், ஆதரவாளர்கள் திரண்டு வந்து வாழ்த்தி நிற்க, வெளிச்சவீடு திறந்து வைக்கப்பட்டு விருந்தினர்கள் வெளிச்ச வீட்டின் மேற்தளம் வரை ஏறி சென்று பார்வையிட்டதோடு விசேட படகுகள் மூலமாக கடலுக்குள்ளும் சென்று, வெளிச்சவீட்டை பார்வையிட்டனர்!
தொடர்ந்து கலை நிகழ்வுகளும், விருந்தினர்களின் வாழ்த்தொலிகளோடும் உச்சம் கொண்ட விழாவில் வெளிச்சவீடு நி்ர்மான பணிகளில் வேலை செய்த பணியாளர்களான திரு. கெனடி குழுவினர், திரு நாயகம் குழுவினர் கொளரவிக்கப்பட்டனர்!
அதனை தொடர்ந்து 'சுருதிலயா' இன்னிசை கச்சேரியில் விழா கோலாகலம்கண்டது!
ஆதரவு தந்து, நிதியுதவியளித்த அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகளோடு, உங்கள் ஆசிகளால் எம் பயணங்களை தொடர தயாராகிறோம்...Share:

No comments:

Post a Comment