மாதகல் பிரதான வீதியில் முத்துக்கடைச் சந்தி மற்றும் வேலுப்பிள்ளைகடைச் சந்தி ஆகிய இடங்களில் நீண்ட காலமாக புனரமைப்புகள் இன்றி கிடக்கும்..!

வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபையினரே.  நீங்கள் தற்போது பார்த்துக்கொண்டு இருப்பது  மாதகல் பிரதான வீதியில் முத்துக்கடைச் சந்தி மற்றும் வேலுப்பிள்ளைகடைச் சந்தி ஆகிய இடங்களில் நீண்ட காலமாக புனரமைப்புகள் இன்றி கிடக்கும் பயணிகள் நிழற்குடைகள்.மேலும்  மாதகல் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு முன்னால் முன்னர் இருந்த நிழற்குடை வீதிப் புனரமைப்பு வேளை அகற்றப்பட்டு இன்றுவரை அவ்விடத்தில் நிழற்குடைகள் எவையும் அமைக்கப்படவில்லை. மற்றும் துறைமுகப் பகுதியில் முன்பு  அமைக்கப்பட்டிருந்த இரு நிழற்குடைகள் யுத்தகாலத்தில் அழிந்தது பின்னர் மக்கள் மீள்குடியேறி பல வருடங்கள்  ஆகியும் இதுவரை அமைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது . சம்பந்தப்பட்டஅதிகாரிகளே! மேலே குறிப்பிட்ட தற்போது உள்ள இரண்டு நிழற்குடைகளினுள் பயணிகள் தங்கி நிற்க முடியுமா? மழை ,கடும் வெயிற்காலங்களில் பயணிகள் எதிர் நோக்கும் துன்பங்களை கவனத்தில்  கொண்டு தகுந்த  நடவடிக்கை எடுத்து புனரமைத்து தருவீர்களா?

Share:

No comments:

Post a Comment