விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு பிரதேச செயலகத்தினால் துரித கிராமிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் விசேட நிதி ஒதுக்கீட்டின்..!

விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு பிரதேச செயலகத்தினால் துரித கிராமிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் விசேட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் கழக மைதானத்தினை சுற்றி கம்பி வேலி அமைத்தலின் செயற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளன.

இதற்கு உதவிய அனைத்து அங்கத்தவர்களிற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.மனோ கணேசன் அவர்களினால் தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் செயற்திட்டத்தினூடு ஒதுக்கப்பட்ட ஒரு மில்லியன் (1000000 /=) ரூபா நிதியில் எமது கழகத்தின் உள்ளக விளையாட்டு அரங்கு அமைத்தலின் செயற்திட்டம் எமது கழக அங்கத்தவர்களின் உதவியுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

இவ் செயற்திட்டத்தினை முடிப்பதற்கு உதவி செய்த கழக அங்கத்தவர்கள்,கழக ஆதரவாளர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதன் சில பதிவுகள்..Share:

No comments:

Post a Comment