திரு வேலுப்பிள்ளை ஆறுமுகம் (இந்திரன்)

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

பிறப்பு19 APR 1945
இறப்பு15 OCT 2019
அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம் (இந்திரன்)
JP, ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்

 திதி: 14.11.2019
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்களின்  31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

 
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!

உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உங்களது அன்பாலும் அரவணைப்பாலும்
உங்களது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!


பாசத்தின் உறைவிடமாய் எங்கள் வாழ்வின் வழிகாட்டியாய் திகழ்ந்து எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட எங்கள் குடும்பத் தலைவரின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு


குடும்பத்தினர்

...::மரண அறிவித்தல்::...

திரு வேலுப்பிள்ளை ஆறுமுகம் (இந்திரன்)

JP, ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்

தோற்றம்: 19-04-1945                                     -                       மறைவு: 15-10-2019

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 15-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,


தனலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,   Dr. ஷிரோணி(அவுஸ்திரேலியா), சுரேஸ் (அவுஸ்திரேலியா), சபேஸ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், Dr. கோகுலன்(அவுஸ்திரேலியா), தக்‌ஷிலா(அவுஸ்திரேலியா), கமலினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், செல்வரத்தினம்(கனடா), காலஞ்சென்ற லோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற செல்லையா அருளம்பலம்(மலேசியா) அவர்களின் அன்பு மருமகனும், அமீஷா, அஷ்வின், அக்‌ஷரா, மிதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும், மனோரஞ்சிதம், நற்குணசிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயலட்சுமி மற்றும் நாகராசா, மகேந்திரராசா, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு  மைத்துனரும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு


தனலட்சுமி - மனைவி

ஷிரோணி - மகள்

கோகுலன் - மருமகன்

சுரேஸ் - மகன்

சபேஸ் - மகன்

செல்வரத்தினம் - சகோதரர்
Share:

No comments:

Post a Comment