திரு. சடாட்சரம் இலட்சுமணன் (செல்வன்)

…::நன்றி நவிலல்::…

திரு சடாட்சரம் இலட்சுமணன்பிறப்பு : 12 DEC 1966 - இறப்பு : 04 NOV 2019 

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kent, Margate ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சடாட்சரம் இலட்சுமணன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம் குலத்தின் விருட்சமாகி
அன்புக்கு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய்
எம்முடன் வாழ்ந்து

எம்மை எல்லாம் ஆறாத்துயரில்
ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எமது தெய்வமே!

உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திகின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,

குடும்பத்தினர்

+447979770415

…::மரண அறிவிப்பு::…

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kent, margate ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சடாட்சரம் இலட்சுமணன் அவர்கள் 04-11-2019 திங்கட்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, ஆச்சிமுத்து தம்பதிகள், தாமோதரம்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சடாட்சரம், காலஞ்சென்ற சிவலட்சணம் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

சடாட்சரம், காலஞ்சென்ற சிவலட்சணம் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற அப்புத்துரை, அன்ன புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரசேகரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுலக்சன், சுகிதா, சுமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜிதா அவர்களின் அன்பு மாமனாரும்,

இலட்சுமணசேகர், இலட்சுமணதாசன், கனகலட்சுமி, காலஞ்சென்ற செல்வலட்சுமி, குகதாசன்(பிரபு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணரட்ணம், இராகினி, தர்சினி, அபராஜிதாசயினம்மா, இரஞ்சிதமலர், துரைரட்ணம், காலஞ்சென்றவர்களான சந்திரகாந்தா, சந்திரபோஸ் மற்றும் சந்திரகலா, குணபாலசிங்கம், சந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

 Get Direction

 • Wednesday, 20 Nov 2019 11:45 AM - 2:30 PM
St Peters Memorial Hall31 High St, Broadstairs CT10 2TH, United Kingdomகிரியை Get Direction
 • Wednesday, 20 Nov 2019 3:00 PM - 3:30 PM
Thanet CrematoriumManston Rd, Margate CT9 4LY, UKமதிய போசனம் Get Direction
 • Wednesday, 20 Nov 2019 3:30 PM - 5:00 PM
St Peters Memorial Hall31 High St, Broadstairs CT10 2TH, United Kingdom
 தொடர்புகளுக்கு

சுமணன்
 சேகர்
 சுலக்சன்
 குட்டி
 பிரபு
 தங்கன்
 திலீபன்எவர்தான் தருவார் எனக்கிங்கு?
அய்யா உன்றன் முகங்காண
  ஆவி துடியாய்த் துடிக்கிறதே!
பொய்யாய் வந்து போனாயோ?
  பிள்ளை என்னை ஏமாற்றி!
மெய்யே கலைந்து போகிறதே!
  மீளா உன்றன் நிலையெண்ணி!
அய்யோ கொடிய கூற்றுவனால்
  ஆழாத் துயரில் வாடுகிறேன்!
தம்பி என்றன் வாழ்வொளிரத்
  தனியே வந்தாய் கடல்தாண்டி!
செம்பில் வடித்த சொல்போலச்
  சீர்மை மொழிகள் நீ..தந்தாய்!
அம்பில் பாயும் விடமெல்லாம்
  அகற்றும் நெஞ்சங் கொண்டவனே!
தம்பி என்னைத் தனிமையிலே
  தவிக்க விட்டுச் சென்றாயோ?
அண்ணா வென்றே அன்புருக
  அழைக்கும் தூரம் நீயுமில்லை!
எண்ணா திருக்கும் நேரமென
  இமைக்கும் நொடியும் எனக்கில்லை!
உண்ணா திருந்த உனையெண்ணி
  உடலே கருகித் துயருற்றேன்!
அண்ணா நீயும் வருவாயோ?
  அகமே குலைந்து தேடுகின்றேன்!
ஆண்டு இருபது கடந்ததுவோ?
  அன்புத் தம்பி எனைக்காண!
மாண்டு போன காலங்கள்
  மனதை வதைத்துக் கொன்றதையா!
மீண்டு நீயும் வந்தாயே!
  மெல்ல வசந்தம் தந்தாயே!
வேண்டு கின்றேன் என்சாமி!
  மீண்டு நீயும் வாராயோ?
அல்லும் பகலும் அகமகிழ்ந்து
  அன்பைப் பொழியும் உன்னுயிரைக்
கொல்ல வந்த கூற்றுவனும்
  கொன்று செல்லத் துணிந்தானோ?
இல்லம் வருவாய் எனவெண்ணி
  எண்ணும் நாளைப் பொய்யாக்கி
செல்வன் எங்குச் சென்றாயோ?
  தேடி நாளும் தொலைகின்றேன்!
பெற்ற தாயின் பாசத்தில்
  பிள்ளை என்னை மறந்தாயோ?
சற்று நேரம் பொறுக்காமல்
  தனியே விட்டுச் சென்றீரோ?
குற்ற நெஞ்சங் கொதிக்கிறதே!
  கூட்டில் வாடி வதைகிறதே!
உற்றார் வந்து போகின்றார்!
  உன்னைத் தேடி உளறுகின்றேன்!
கண்ணே மணியே என்றென்னைக்
  கண்ட போதும் கலங்காமல்
கண்ணுக் குள்ளே வைத்தாயே!
  கன்றைப் போலே கதறுகின்றேன்!
அண்ணா! அண்ணா! என்றழைக்க
  அருகில் நீயும் இன்றில்லை!
மண்ணாய்ப் போன காலனுக்கும்
  மனமே கல்லாய்ப் போனதுவோ?
பொன்னாய்ப் பூக்கும் உன்சிரிப்பு
  பொழியும் பாசப் பொன்மொழிகள்!
முன்னோர் போற்றும் உன்திறமை
  முதிர்ந்த அறிவின் சாட்சியங்கள்!
அன்பால் காக்கும் உன்பொறுமை
  அணைக்கும் கைகள் சாற்றிடுமே!
என்பால் கொண்ட உன்பாசம்
  எவர்தான் தருவார் எனக்கிங்கு?
அன்பைப் பொழியும் உன்னுருவம்
  ஆழ நெஞ்சை அடைக்கிறதே!
இன்பம் தந்த இன்சொற்கள்
  இடியாய்க் காதில் விழுந்ததுவோ?
சன்னல் வழியே வந்தசெய்தி
  தாளாத் துயரைத் தந்ததுவே!
துன்பந் தரவே துணிந்தனையோ?
  தூண்டில் மீனாய்த் தூங்குகின்றேன்!
மனத்துள் வலியைத் தந்தவனே!
  வறண்டு நெஞ்சம் துடிக்கிறதே!
கனத்த இதயம் கரைந்தோடி
  கண்ணீர்க் கடலில் தவிக்கிறதே!
வனமே தீயில் எரிவதுபோல்
  வாழ்வே மாண்டு போகிறதே!
மனமே சென்றாய் எங்கே?உன்
  மறைவை எண்ணிக் குலைகின்றேன்!

அன்புத் தம்பி
பாவலர் நெய்தல் நாடன்

Share:

No comments:

Post a Comment