🌷🌷🌷🌷🌷பத்தாவது அகவையில்🌼🌼🌼🌼🌼

மாதகல் நெற் இணையத்தளம் ஒன்பதாவது ஆண்டை நிறைவுசெய்து
பத்தாவது ஆண்டில் காலடி வைப்பதையிட்டு பெருமை கொள்கின்றது.
இவ்வருட காலங்களில் எமது இணையத்தின் மூலம் எமது கிராமத்திற்கும், உறவுகளுக்கும் எம்மால் முடிந்த சேவையை வழங்கியுள்ளோம்.
எனினும், இவ்விணையத்தின் மூலம் எவரேனும் கசப்படைந்திருந்தால் முதற்கண் வருத்தத்தையும்,மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இணையம் காலெடுத்து வைத்திருக்கும் இந்த நாளில், எமது வளர்ச்சியில் பக்க பலமாக இருந்து ஆதரவளித்த சகல உறவுகளுக்கும் ,
 அதன் தோற்றம் முதல் அதனுடன் இணைந்து பயணித்தவர்கள் , தகவல் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் "மாதகல் நெற்"இணையம் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்ற அதேவேளை இனிவருங் காலங்களிலும் அதன் பயணத்திற்கு அனைவரது ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்த்து நிற்கிறோம்.
தொடர்ச்சியாக இணையம் செயற்பட ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய
அனைத்து இணைய வாசகர்களுக்கும் எமது  நன்றிகளை தெரிவித்துக் கொண்டு தொடர்ந்து உங்கள் ஆதரவுடன் கம்பீரமாக பயணிக்க உறுதிகொள்கிறது எம் இணையத்தளம்.
மாதகல் மக்களின் ஒரேயொரு உறவுப்பாலமாகிய எம் இணையம் பல சவால்களை தாண்டியும் இயங்கிவருகிறது.
இனி வரும் காலங்களிலும், இவ் இணையம் வெற்றி நடை போட்டு கம்பீரமாக பயணிக்க  உங்கள் உதவிக்கரங்களை எதிர்பார்த்த வண்ணமுள்ளோம்.

இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவும், காலமும் கைக்கொடுக்கும் என்றே நாங்கள் கருதுகின்றோம்.
கிராமம் முன்னேற வழிவகுப்போம் !!!

நாம் கிளைகள் போல அங்காங்கே படர்ந்திருந்தாலும் நம் வேர் என்றும் 

எம் மாதகல் மண் என்பதை மறவாதே!

Share:

No comments:

Post a Comment