பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக் கூடத்தில் 2 ஆவது தடவையாக நடாத்திய சரஸ்வதி பூஜை நிகழ்வுகள்..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக்கூடம் France நாட்டில் Marly le Roi நகரசபையின்  விழா மண்டபத்தில் 2 ஆவது தடவையாக  06-10-2019 அன்று நடாத்திய சரஸ்வதி பூஜை விழாவின்  சில பதிவுகள் : 


   எமது சங்கத்தின் தமிழ் பாடசாலையின் 10 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு தமிழ் பாடசாலையின்  ஆரம்பகர்த்தா ஆகிய அமரர் திரு இந்திரகுமார் நினைவாக "இந்திரகுமார் தமிழ் மொழி கல்விக் கூடம்" என   பாடசாலைக்கு பெயர் சூட்டப்பட்டது.


சகலகலாவல்லி மாலை பாடல்களில் போட்டி வைத்து 1ஆவது பரிசாக 150யூறோவும், 2ஆவது பரிசாக 50யூறோவும், பங்குபற்றிய 3 போட்டியாளர்களில் ஒவ்வொருவரிற்கும் 20யூறோவும் வைஸ்ணவி கடையினால் வழங்கப்பட்டது. 

தமிழ் மொழி கட்டுரைப் போட்டி நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாடசாலையினால்    பரிசுகளும் வழங்கப்பட்டன. 

இறுதி நிகழ்வாக கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


Share:

No comments:

Post a Comment