மாதகல் இளைஞர் சங்கமும் சனசமூக நிலையத்தின் 82ஆம் ஆண்டு நிறைவின் கலைவிழா பரிசளிப்பு விழா நிகழ்வுகள்..!

சங்கத்தலைவர் க.மயூரன் தலைமையில் 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00மணிக்கு கோலாகலமாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர்திரு வே.சிவஞானசோதி (அமைச்சு செயலாளர்,தேசிய கொள்கைகள்,பொருளாதார விவகாரம் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி இளைஞர் விவகார அமைச்சு) அவர்கள் உட்பட பல விருந்தினர்களும் மாதகல் வாழ் மக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.அது தொடர்பான பதிவுகள் சில.... 

##பொதுஅறிவு பரீட்சை பரிசளிப்பு

##துடுப்பாட்ட தொடர் வெற்றிக்கிண்ணம் வழங்கல்

##பாரம்பரிய விளையாட்டு விழா பரிசளிப்பு

## கண்கவர் கலைநிகழ்வுகள்

இளைஞர் சங்கமும் சனசமூக நிலைய  82ஆம் ஆண்டு நிறைவுவிழாவின் அனைவருக்குமான பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்.  இளைஞர் சங்கத்தின் கிரிக்கெற் 2019 மாதகல் சம்பியனாக வெற்றிபெற்று விநாயகர் விளையாட்டுக்கழகம் அபாரம்  மாதகல் இளைஞர் சங்கமும் சனசமூக நிலையத்தினால் ஞாயிறு மாலை நடாத்தப்பட்ட துடுப்பாட்ட சுற்றுத்தொடரின் அரையிறுதி போட்டிகளில் விநாயகர் அணி சென்தோமஸ் ஐக்கிய அணி என்பன பலமான சென்யோசவ் நியூஸ்ரார் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதி போட்டியில் மோதின விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் விநாயகர் விளையாட்டு கழக அணி வெற்றி பெற்று சம்பியனாகியது ****கிரிக்கெற் தொடரை நடாத்த ஒத்துழைப்பு செய்த சகல உறவுகளுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.


இளைஞர் சங்கத்தின் 82ஆம் ஆண்டு நிறைவுவிழாவின் அனைவருக்குமான பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் விநாயகர் விளையாட்டு கழக மைதானத்தில் எதிர்வரும் 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறும்.... அனைவரையும் பங்குபற்றி பெறுமதியான பரிசில்களை வெற்றிகொள்ள அழைக்கின்றோம் .
இளைஞர் சங்கத்தின் 82ஆம் ஆண்டு நிறைவு கிரிக்கெற் சுற்றுத்தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவு பெற்றன... பலமான அணிகள் தகுதி பெற்ற
அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என்பன எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 29.09.2019 அன்று மாலை 3.30மணியளவில் இடம்பெறும்...
அரையிறுதியில் மோதும் அணிகள்
1.விநாயகர் (A) VS சென்யோசவ்
2.சென்தோமஸ்(B) VS நியூஸ்ரார் (A)
அனைத்து ஆதரவாளர்களும் வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சங்கத்தின் 82 ஆம் ஆண்டுவிழா நிகழ்வுகள் வரிசையில் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் 15.09.2019 காலை இடம்பெற்றது சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்ட போட்டிகள் எதிர்வரும் 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு விநாயகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமாகும். ரசிகர்கள் அனைவரையும் வருகைதருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இளைஞர் சங்கமும் சனசமூக நிலைய 82ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெறும் கிரிக்கெற் சுற்றுத்தொடர்
ஞாயிற்றுக்கிழமை 15.09.2019 காலை 8.30 ஆரம்பமாகின்றது பதிவுசெய்யப்பட்ட மாதகல் கழகங்களுக்கு இடையே
விநாயகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் லீக் முறையில் போட்டிகள் நடைபெறும்.
இளைஞர் சங்கமும் சனசமூக நிலைய 82ஆம் ஆண்டுவிழா பொது அறிவு போட்டிப்பரீட்சை மாதகல் பாடசாலைகளில் சிறப்பாக இடம்பெற்றது. இப் பரீட்சைக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.

இளைஞர் சங்கமும் சனசமூக நிலைய  82ஆம் ஆண்டு நிறைவு விழா
1) பொதுஅறிவு போட்டிப்பரீட்சை 13.09.2019 அன்று வெள்ளிக்கிழமை பின்வரும் மாதகல் பாடசாலைகளில் இடம்பெறும்

#நுணசை ம.வி காலை 9.30 மணி

# சென்யோசப் ம.வி --காலை 10.00மணி --தரம் 6 தொடக்கம்13 வரை
(வெளிப்பிரதேச பாடசாலைகளில் கற்கும் மாதகல் மாணவர்களும் பங்குபற்றமுடியும்)

#விக்னேஸ்வரா --காலை 11.30 மணி தரம் 04 ,05
(வெளிப்பிரதேச பாடசாலைகளில் கற்கும் மாதகல் மாணவர்களும் பங்குபற்றமுடியும்)

#சென்தோமஸ் பெண்கள் பாடாலை
காலை 11.30மணி

****கிரிக்கெற் சுற்றுத்தொடர்**** ஞாயிற்றுக்கிழமை 15.09.2019 காலை 8.30 ஆரம்பமாகின்றது
விநாயகர் விளையாட்டுக்கழக மைதானம்
இளைஞர் சங்கமும் சனசமூக நிலையத்தின் 82 ஆம் ஆண்டு விழா கொண்டாடுவது தொடர்பான விசேட பொதுக்கூட்டம் ..


இளைஞர் சங்கத்தின் எல்லை பிரதேசத்தை சேர்ந்த சிறுவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் முகமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Share:

No comments:

Post a Comment