பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 15ஆவது ஒன்று கூடல் விழாவின் நிகழ்வுகள்..!

15-09-2019 அன்று நடந்த பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 15ஆவது ஒன்று கூடல் விழாவின் நிகழ்வுகள்,


ஒன்று கூடல் நிகழ்வினை காலை 10 மணி 30 நிமிடமளவில் யேர்மனி நாட்டில் இருந்து வருகை தந்த திரு,திருமதி தேவராசா விசயகுமாரி தம்பதியினர் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். 


ஒன்று கூடல் விழாவில் பொதுக்கூட்ட நிகழ்வும், ஆண்டுவிழா நிகழ்வும் இடம் பெற்றது. 


           முக்கிய நிகழ்வாக மூன்று வருடத்திற்கொரு முறை நடைபெறும் நிர்வாக மாற்றம் இடம் பெற்றது. 


அன்றய தினம் மாதகல் மக்களின் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 


இந்த நிகழ்விற்கு, எமது அழைப்பினை ஏற்று, சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு பாலசுப்பிரமணியம்[சிவா], அவரது மனைவி தவமலர், பிள்ளைகளான செல்வி பார்கவி, செல்வி பார்நதி, மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் திரு கேமவண்ணன் [கேசவன்], திரு கருணாமூர்த்தி[கருணா] ஆகியோரும், பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு சந்திரசேகர றவி,  அனைத்துலகத் தொடர்பாளர் திரு மனோவழகன்[மனோ], செயலாளர் திரு சுரேஸ் , நிர்வாக உறுப்பினர் திரு சிறீ பிராபகரன்[பிரபா], மற்றும் திருமதி நெல்சன் ஆகியோரும், டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினரான  திரு தில்லைப்பரஞ்சோதிநாதன் அவர்கள், அவருடைய மகள் செல்வி துசா, செல்வி சிறிதரன் சுவேதா ஆகியோரும் வருகை தந்து விழாவினை சிறப்பித்தனர்.


விழா நிகழ்வுகள் அனைத்தும் இரவு 9 மணியளவில் நிறைவு பெற்றது.

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 15ஆவது ஆண்டு விழாவிற்கு மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியின் வாழ்த்துச் செய்தி :
Share:

No comments:

Post a Comment