அமரர் அந்தோனிமுத்து கிறிஸ்தோப்பர்

…::கண்ணீரஞ்சலி::…


...::மரண அறிவித்தல்::...


யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து கிறிஸ்தோப்பர் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து இசெபெல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், செபஸ்தியாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரிறோசலின்(ஞானவதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

நிர்மலா சகாயராணி(சாந்தி- பிரான்ஸ்), அமலோற்பவகிறேஸ்(வசந்தி), அன்ரன் சத்தியசீலன், மரிய யூலியானா(சுமதி- இலங்கை), யூலியஸ் ஞானசீலன்(பிரான்ஸ்), மேரி கிறிஸ் ரீனா(தமயந்தி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருளானந்தம்(இராசையா), காலஞ்சென்றவர்களான கிறிஸ்றீனம்மா, சிறில்(இராசரத்தினம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்ரனி பெர்னாண்டோ(பிரான்ஸ்), றூபா, றெஜீனா, அன்ரன் பிறேமதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சூசைமுத்து, மரியாம்பிள்ளை, அகுஸ்தீன், சிங்கராசா, மாசிலாமணி, மரியமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோந்திறின், ஸ்ரெபான், செபஸ்ரியன், றெஜி, றெஜிஸ்ரலா, ஜெசிக்கா, டினோத், சந்தோஸ், கெவின், கெவிஷா, லெபோன், கிறிஸ் ரீபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 16-09-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் புனிததோமையார் ஆலயத்தில் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து புனிததோமையார்  சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


அன்ரன் சாந்தி - மகள்- மருமகன்

வசந்தி - மகள்

சத்தியசீலன் - மகன்

சுமதி - மகள்

ஞானசீலன் - மகன்

தமயந்தி - மகள்

வாழ்க்கை வரலாறு
உலகின் மூத்த குடியாம் தமிழ்க்குடி.  அக்குடி அரசர்களின் வேடங்களை தரித்து திருவிழாக்களில் நடித்த ஒரு பாரம்பரிய நாட்டுக்கூத்து கலைஞரின் வாழ்க்கை வரலாறிது...
தமிழ் கூறும் நல்லுலகாம் யாழ்ப்பாணம் மாதகலையில் அந்தோனிமுத்து இசெபெல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனாக கிறிஸ்தோப்பர் அவர்கள் 22/APR/1934ஆம் ஆண்டு பிறந்தார். அருளானந்தம், கிறிஸ்றீனம்மா, சிறில் போன்ற உடன்பிறப்புக்களுடன் ஓடி ஆடி வளர்ந்து வந்த இவர் தனது சுற்றத்தாரால் பாசமாக சிங்கராசா என அன்போடு அழைக்கப்பட்டார்.
அள்ள அள்ள வளம் குன்றாத கடலிலிருந்து மின்பிடிக்கும் தொழிலை செய்து வந்த இவர், செபஸ்தியாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியான மேரிறோசலின் என்பவரை மணமுடித்து இல்லற வாழ்வை சந்தோசமாக வாழ்ந்து வந்தார். நிர்மலா சகாயராணி, அமலோற்பவகிறேஸ், அன்ரன் சத்தியசீலன், வ்மரிய யூலியானா, யூலியஸ் ஞானசீலன், மேரி கிறிஸ் ரீனா போன்ற அன்பு பிள்ளைகளைப் பெற்று, நற்பண்புகளை போதித்து, அன்பாக வளர்த்தார்.
தனது பிள்ளைகள் திருமண வயதை எட்டியதும் அன்ரனி பெர்னாண்டோ, றூபா, றெஜீனா, அன்ரன் பிறேமதாஸ் போன்றவர்களை அவர்களுக்குத் திருமணம் முடித்து வைத்து, அவர்கள் பெற்ற செல்வங்களான சோந்திறின், ஸ்ரெபான், செபஸ்ரியன், றெஜி, றெஜிஸ்ரலா, ஜெசிக்கா, டினோத், சந்தோஸ், கெவின், கெவிஷா, லெபோன், கிறிஸ் ரீபன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் பாசத்தை பொழிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.
புத்தகங்கள் வாசிப்பதையும், திரைப்படங்கள் பார்ப்பதையும், தினசரி நாளிதழ்களை படிப்பதையும் தனது அன்றாட பொழுதுபோக்காக கொண்டிருந்த இவர், அதிக பக்தி கொண்டு தேவாலயங்களுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். மேலும் உறவுகளிடம் பாசத்தை பொழிந்து, வாழ்வில் நேர்மையை கடைபிடித்த இவர் எதர்க்கும் அஞ்சாதவர்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என அன்பாக வாழ்ந்து வந்த இவர் 14.09.2019 இல் 85 வயதில் இந்த உலக வாழ்வை துறந்து இறைவனடி சேர்ந்தார்.
Share:

No comments:

Post a Comment