செல்வன் பார்த்திபன் தேவதாசன்


 …::கண்ணீர அஞ்சலி::…

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் சரவணை, மாதகல் போன்றவற்றை பூர்வீகமாகக் கொண்டதும், ஐரோப்பாவில் வளர்ச்சி அடைந்ததும், அழகிய பாரிசினை தலைநகரமாகக் கொண்ட பிரான்ஸ்ஸில் 28/JUN/1992 இல் திரு.திருமதி தேவதாசன் பவானி தம்பதிகளின் அன்பு மகன் பார்த்தீபன் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.                                        
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குணாளினி, துர்க்காயினி, அமிர்தினி போன்ற உடன்பிறப்புகளுடன் பசுபதிப்பிள்ளை அமிர்தவல்லி, கிருஸ்ணசாமி மனோன்மணி தம்பதிகளின் மடியில் பேரனாக  குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதுடன் ஜெமிரா, கபித்திரா போன்றவர்களின் மாமனாக சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.                                               
மேலும் கண்ணா என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் இவர் நண்பர்களுடன் தொலைபேசியில் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியதுடன் திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார்.                                                                        
இவ்வாறு  உற்றார், உடன்பிறப்புகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 12.09.2019 இல் 27 வயதில் பிரான்ஸில் உள்ள Les clayes - Sous - Bois நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
“இளமை உருவே இளம் தென்றலே
முதுமை ஞானம் முழுவதும் கொண்ட......
அருமை உறவே ஆருயிர் மருந்தே
இனிமை மனதுடன் இன்புற்று வாழ்ந்து
பெருமை சேர்த்த பெரு மகனே
பிரிந்து சென்றீரே எமைத் தவிக்கவிட்டு”

Share:

No comments:

Post a Comment