மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவனுமான மற்றும் தாம் கல்வி பயின்ற பாடசாலையின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவருமான திரு பூ. அன்பழகன் அவர்கள்..!

இப்பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பதற்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தால் நியமிக்கப்பட்ட வே. வருணிகா என்பவருக்கான மாதாந்த வேதனத்தை வழங்குவதற்கு நிதியுதவி அளித்துள்ளார். அதற்கு இப் பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். தாம் பயின்ற பள்ளயின் மீது கொண்ட நேசத்தினை நாமும் தலைவணங்கி, இவர் போல் அனைவரும் முன்வந்து தம் பாடசாலை நலனுக்காக பாடுபட மாதகல் மக்கள் சார்பில் தாழ்மையுடன் வேண்டுகிறோம். இவருக்கு எம் இணையத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Share:

No comments:

Post a Comment