யா/ மாதகல் நுணசை வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் நன்றி தெரிவித்தல்..!

எமது கிராமமான மாதகலில் அமைந்துள்ள நுணசை வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் மிகச்சிறிய நிலப்பரப்பிலே அமைந்து காணப்பட்டமையால் விளையாட்டு செயற்பாடுகளை மேற்கொள்ள பல சிரமங்களை எதிர்நோக்கவேண்டிய நிலை இருந்தது.
இதை அறிந்து முன்னாள் அதிபரும், வலிதென்மேற்கு பிரதேசசபை உறுப்பினருமாகிய திரு. வி. சுப்பிரமணியம் அவர்களது முயற்சியினால் நுணசை வித்தியாலயத்தின் பழைய மாணவனான திரு.வீரபாகு வேலுப்பிள்ளை என்பவர் ரூ 250000 பெறுமதியான காணியினை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, இவ்வயற்காணிக்கு மண்பரவி சமப்படுத்துவதற்கன நிதியுதவி முயற்சிகளையும் திரு.சுப்பிரமணியம் அவர்களே மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், இவர் எம் மண்ணின் அபிவிருத்திக்கு பாடுபவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது சேவையையும், எம் கிராமத்தின் மீது கொண்ட பற்றினையும் எம் மாதகல் உறவுகள் சார்பாக பாராட்டி வாழ்த்துகிறோம்.


Share:

No comments:

Post a Comment