பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கத்தின் இரண்டாவது வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்..!

பிரித்தானியா மாதகல் நலன்புரிச்சங்கத்தினால் 07/07/2019 அன்று நடாத்தப்பட்ட இரண்டாவது வருடாந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்த அனைவருக்கும் எமது நன்றிகள்..! 

இந்நிகழ்வைச் சிறப்பாக நடாத்த நன்கொடை கொடுத்து உதவிய நல் உள்ளங்களிற்கும் எமது நன்றிகள்.  கலந்து சிறப்பித்த சிறார்களுக்கும்,உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எமக்கு ஊக்கமளித்து இவ்விழாவை திறம்பட நடாத்த உதவிய சங்க உறுப்பினர்கள் ,நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது நன்றிகள்.கன்னி முயற்சியாக நாம் நடத்திய விளையாட்டுப் போட்டி இனிதே முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதோடு வருங்காலத்தில் மேலும் சிறப்பாக நடாத்த எல்லோருடைய ஒத்துழைப்பையும் கேட்டுக் கொள்கிறது பிரித்தானியா மாதகல் நலன்புரி சங்கம்.


 
Share:

No comments:

Post a Comment