பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 15ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் சென்ற வருடம் போல் பரீஸ் நகரத்தில் உள்ள..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 15ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் சென்ற வருடம் போல் பரீஸ் நகரத்தில் உள்ள PARC DE BAGATELLE எனும் மைதானத்தில், விளையாட்டுப் பொறுப்பாளர் திரு தவனேஸ்வரன், உதவி விளையாட்டுப் பொறுப்பாளர் திரு விக்ரர் ஆகியோரின் ஒழுங்கமைப்பில், ஞாயிறு 30-06-2019 அன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி மாலை 6 மணியளவில் நிறைவுபெற்றது.. பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 15ஆவது விளையாட்டுப் போட்டி அன்று (ஞாயிறு 30-06-2019) "பசுமையில் மாதகல் " எனும் திட்டத்திற்கான, அதிஸ்டலாபச் சீட்டுக்களின் விற்பனை இடம் பெறும்.
ஓடி விளையாடு பாப்பா

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா

நீ ஒருவரையும் வையாதே பாப்பா 

காலை எழுந்தவுடன் படிப்பு

பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுவதும் விளையாட்டு

என வழக்கப்படுத்திக்கொள் பாப்பா ....என பாரதியார் கூற்றுக்கேற்ப;

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி சகயம்,

தோல்வியே வெற்றிக்கான முதற்படி, 

தோல்வி கண்டு துவண்டு போகாமல் மீண்டும் முயற்சி செய்து   வெற்றி எனும் இலக்கை அடையவேண்டும் ... என நம் முன்னோர்கள் சொன்ன பொன்மொழிகளை உள்வாங்கி 

எம் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கம் எம் இளையதலைமுறையினருக்கும் புரிதல், தெரிதல், விட்டுக்கொடுத்தல், சகித்தல், போராடுதல், விடாமுயற்சியுடன் செயற்படல் போன்ற வாழ்க்கைக்குத்தேவையான அடிப்படை விதிக்கோட்பாடுகளை மனதில் பதிய வைக்கவே வருடா வருடம் விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளை நடாத்திவருகிறது.

அதேபோன்று, இவ்வருடமும்  இவ் விளையாட்டு போட்டியானது  30/06/2019 அன்று வழமைபோல அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பதை நம் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம்...

பிரான்ஸ் வாழ் மாதகல் மக்கள் அனைவரும் வாங்களேன் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு கொஞ்சம் போட்டியினை சிறப்பித்துத்தான் பார்ப்போமே!!!!


பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 15 ஆவது வருடாந்த விளையாட்டு விழா 30-06-2019 அன்று காலை 09.00மணியளவில் ஆரம்பமாகும். 

பிரான்ஸ் நாட்டில் வாழும்   மாதகல் மக்கள் அனைவரையும் அன்புடன் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினர் அழைக்கின்றனர்.
Share:

No comments:

Post a Comment