பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, டென்மார்க், சுவிஸ் நாடுகளில் இயங்கும் மாதகல் நலன்புரி அமைப்புகளால், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள மழை நீரை சேகரிக்கவென..!

பிரித்தானியா, பிரான்ஸ், கனடா,   டென்மார்க்,  சுவிஸ் நாடுகளில் இயங்கும் மாதகல்  நலன்புரி அமைப்புகளால், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள  மழை நீரை சேகரிக்கவென ,  வாங்கிய காணிகளிற்குள்,  அரசாங்க செலவில்  " கோட்டகிரி " குளம் அமைக்கும் வேலைகள் நடைபெறும் போது  22-06-2019 :

மாதகல் கோட்டகிரி குளம் அமைக்கும் வேலைகள் ஞாயிறு 05-05-2019 அன்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராஜா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிலத்தடி நீரினை உயர்த்தவென இக்குளம் அமைக்க காணி வாங்கவென பிரித்தானியா,  சுவிஸ்,  டென்மார்க்,  கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இயங்கும் நலன்புரி அமைப்புகள் பெரும் தொகை பணம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் திரு தவராசா, குளம் அமைக்கும் பொறுப்பாளரும், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தினதும், மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தினதும்  ஆரம்ப கர்த்தாவுமான <மாதகல் மாமனிதன்> திரு சிற்றம்பலம் அவர்கள், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு சஞ்சீவன் (சீலன்) , பிரதேச சபை உறுப்பினர் திரு சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் கலந்துகொண்டனர்.


இத்திட்டத்தின் மூலம் மாதகல் மாமனிதன் திரு சிற்றம்பலம் அவர்களின் முக்கியமான வாழ்நாள் கனவு நிறைவேறுகின்றது.
Share:

No comments:

Post a Comment