சுனாமி சிறுவர் உதவி நிலையத்தின் அன்பான வேண்டுகோள்! மாதகல் வாழ் உறவுகளுக்கும், புலம் பெயர் தமிழ் நலன்விரும்பிகளும்..!

 எமது மண்ணில் நாங்கள் கருவேப்பங்குளம், மட்டக்களப்பு, அம்பாறை, வேலணை, மானிப்பாய், மாதகல் என பொருண்மிய மேம்பாட்டு  பொருளாதார உதவித்திட்டங்களுக்காக நிறுவகங்களை சுனாமி சிறுவர் உதவி நிலையம் ஊடாக உருவாக்கி வந்துள்ளோம்.

       அந்த வகையில் பொன்னுத்துரை ஞாபகமாக ''பொன்னுத்துரை பொருண்மிய மேம்பாட்டு நிறுவகம்'' என மாதகலிலும் உருவாக்கப்பட்டது.

    அதில் நேற்றிரவு பயமுறுத்தும் நோக்குடனும், களவெடுக்கும் நோக்குடனும் ஒருசிலர் உட்புகுந்துள்ளனர். அவர்களை இனம் காண வேண்டிய தேவை மாதகல் மக்களுடையதும் மாதகல் மண்ணை விசு வாசிப்பவர்களுக்கும் .

ஆகவே இவ் ஏட்டினை இணையத் தளம் மூலமாக பதிவு செய்கிறோம்.

 இனம் காணப்படும் பட்சத்தில் இணையத் தளம் மூலம் அவர்களை முன்னிறுத்துவோம். அதற்கு மாதகல் மக்களது ஆதரவை நல்கி நிற்கிறது சுனாமி சிறுவர் உதவி நிலையம் 

மாதகல் மண்ணை நேசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் தயவான வேண்டுகோள்!

குறிப்பு:- பல்கலைக்கழக மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றோம். புலம் பெயர் இளைய சமுதாயப் பிள்ளைகள் இங்கு படிக்கும் போது அங்கு படிக்கும் மாணவர்களை கற்ப்பித்து வழி நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். பிள்ளைகளுடன் நேரடித் தொடர்புகளுடன் உதவி செய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கிறோம் மாதாந்தம் ரூபா 5000

''மனிதத்தை நேசிக்கும் மானிடரின் மூச்சுக்களைக் காக்க எத்தடைவரினும் களமாடும் எம் மண்ணில்!''

             இங்ஙனம் 

சிறுவர் சுனாமி உதவி நிலையம் 

தொடர்பு:-0041779243687

Share:

No comments:

Post a Comment