மாதகல் கிழக்கு மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக திருமதி வா.சிவனேஸ்வரிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தபால் கந்தோர் வீதி புணரமைப்பு வேலைகள் நிறைவடைந்துவிட்டன மற்றும்..!

மாதகல் பிரதேச சபை உறுப்பின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த திருமதி வா.சிவனேஸ்வரிக்கு மானிப்பாய் பிரதேச சபை ஒதுக்கிய நிதி மூலம் தபால் கந்தோர் வீதி 300m வீதி முழுமையாக போடப்பட்டு வேலைகள் நிறைவடைந்துவிட்டன மற்றும் பிரதேச சபை நிதி மூலம் J151 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீதிகளுக்கு மின்குமிழ்களும் பொருத்தியுள்ளனர். இவர்களுக்கு மாதகல் மக்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர். 
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒவ்வெருவருக்கும் தங்கள் கிராம வளர்சிக்காக ஒவ்வெரு வருடமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாதகல் பிரதேச சபை உறுப்பின் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை சேர்ந்த திருமதி வா.சிவனேஸ்வரியிடம் மாதகல் கிழக்கு மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக  வா.சிவனேஸ்வரிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தபால் கந்தோர் வீதி புணரமைப்பிற்காக தன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார் .10-5-2019 அன்று அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்று வீதி புணரமைப்பு வேலையும் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் ,மக்கள் என பல தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர். திருமதி.சிவனேஸ்வரியின் வேலைத் திட்டத்திற்கு மாதகல் மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்தனர்.Share:

No comments:

Post a Comment