எம் மாதகல் மண்ணின் இளம் மைந்தன் செல்வன் விபுலன் புவனேஸ்வரன் அவர்களை நாம் எம் கிராமம் சார்பில் வாழ்த்துவதில் மிகுந்த மகிழச்சியடைகிறோம்..!

"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே" என்பதை உணர்ந்து,
"தந்தை சொல் மிக்க மந்திரமில்லை " என்பதை உள்வாங்கி , தன் தந்தை வழிகாட்டலின் பாதையை நோக்கி பயணித்து, அவர் மறைவின் பின்னும் தன் தந்தையின் சொல்லினை மதித்து, வாழ்க்கையில்
 பிறந்தோம், இறந்தோம் எனவில்லாமல் ஏதாவது சாதிக்க வேண்டுமென துடித்து செயற்படும் எம் மாதகல் மண்ணின் இளம் மைந்தன் செல்வன் விபுலன் புவனேஸ்வரன் அவர்களை நாம் எம் கிராமம் சார்பில் வாழ்த்துவதில் மிகுந்த மகிழச்சியடைகிறோம்.

பதினைந்து வயது மட்டுமே ஆன இச்சிறுவன் நம் புவித்தாயை வளிமண்டலமாசுவிலிருந்து காப்பாற்றுவதன் நோக்கோடு நடாத்திய விழிப்புணர்வு போராட்டம் பற்றிய பதிவு ஒன்றினை ஏற்கனவே எம் இணையத்தினூடாக பிரசித்துள்ளோம்.
இவர் மேலும் தம் புரட்சியை தொடரும் முகமாக ,சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பல திரையுலக பிரபலங்கள் பங்குகொள்ளும்  உலக புகழ்பெற்ற கான் சர்வதேச திரைப்படவிழாவில் தாம் ஓர் மாநாட்டினை ஒழுங்குசெய்து தம் போராட்டத்தின் காரணங்கள் குறித்தும், வெகு விரைவில் அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வளிமண்டல மாசுதனை தடுக்க ஓர் தீர்வு காண வேண்டும் என தன் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எம் பூமித்தாய் தினந்தோறும் நாம் எண்ணிப்பார்க்கவே முடியாதளவு   பாரிய விளைவுகளை சந்தித்த வண்ணமுள்ளது என்பதை இங்கு வாழும் ஒவ்வொரு மானிடரும் உணர்ந்து, பிறர் நலம் கருதி செயற்பட்டால் மட்டுமே இப் பிரச்சினைக்கு ஓர் தீர்வு கிடைக்கும்.
நம் அடுத்த சந்ததியினருக்கு சொத்துக்களை மட்டும் சேர்த்து வைப்பதில் பாடுபடாமல் அவர்கள் வாழ்வை வாழ்வதற்கு ஓர் தூய்மையான கிரகத்தினை  உருவாக்க ஒன்றினைந்து பாடுபட முன்வரவேண்டும். 
போதிய செல்வம் இருந்தாலும் சுத்தமான காற்று, தூய்மையான நீர், கலப்படமற்ற உணவு இல்லாவிடில் நாம் வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது ஆகிவிடும்.
செல்வன் விபுலன் போல் நாமும் இயற்கையை பாதுகாக்க எம் வாழ்வில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும்.

"இயற்கையை நேசியுங்கள்
அன்போடு பாதுகாக்க தவறாதீர்கள்"

VIPULAN - France

MARCHE LE 15 MARS 2019 À MARLY-LE-ROI

Vipulan, 15 ans, Résistant Climatique

Share:

No comments:

Post a Comment