மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி மாணவர்களின் தளபாட குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக முன்பள்ளி முகாமைத்துவக் குழு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக..!மாதகலைச் சேர்ந்தவரும் தற்போது இத்தாலியில் வசிப்பவருமான திரு.பத்மசிறிகாந் குடும்பத்தினர் மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி மாணவர்களின் தளபாட குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக முன்பள்ளி முகாமைத்துவக் குழு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக எண்கோண மேசை ஆறும்(06), நாற்பது(40) கதிரைகளும் தொண்னூராயிரம் (90,000) பெறுமதியான முன்பள்ளி மாணவர்களுக்கான கதிரை, மேசை அன்பளிப்பு செய்துள்ளார். திரு.பத்மசிறிகாந்த் குடும்பத்தினரிற்கும் இவர்களுக்கு உறுதுணையாக நின்ற திரு.வசந்தகுமாருக்கும்  முன்பள்ளி முகாமைத்துவக் குழு, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

Share:

No comments:

Post a Comment