மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டுநிறைவுவிழாவினை முன்னிட்டு மாதகல் நெற் இணையத்தளத்தினால் நடாத்தப்படுகின்ற கவிதைப்போட்டி..!

மாதகல்நெற் வாசகர்களே !

யா/ மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டுநிறைவுவிழாவினை முன்னிட்டு மாதகல் நெற் இணையத்தளத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் கவிதைப்போட்டிக்கான (like)13/04/2019 அன்றுடன் நிறைவுபெற்றது. 

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! 

அவ்வண்ணம் இணையத்தின் வாசகர்களால் அதிக விருப்புகள் வாங்கி ( like) , அவர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த கவிதை இதோ எந்தன் நினைவுகள் உங்கள் நினைவுகளுடன் இணைந்து கொள்ளும் எம் பாடசாலை....

இக்கவி செ.திருசாந்தன்[ராஜா] என்பவரின் சிந்தனையின் படைப்பாகும். 

இவரை நாம் அகமகிழ்ந்து பாராட்டுவதோடு அவருக்கு ஓர் பெருமதிமிக்க நினைவுப்பரிசிலை வழங்குவதுடன், இவரது கவிதை விக்னேஸ்வரா வித்தியாலய நூற்றாண்டு மலரில் இடம் பெறும் என அறியத்தருகிறோம்

இன்றுடன் அதாவது 10/04/2019 உடன்  உங்கள் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா முன்னிட்டு உங்கள் பழைய ஞாபகங்களை தூசி தட்டி கவி பாடி எமது மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டிய கால அவகாசம் முடிவடைகிறது. 

எதிர்வரும் சனிக்கிழமை 13/04/2019 அன்று வரை உங்கள் மனங்கவர்ந்த கவிக்கு நீங்கள் like பண்ணலாம். அதன்பின்  அதிக விருப்புகள் (like) வாங்கும் அந்த கவிதை யாருடையது என தீர்மானிக்கப்படும். 

ஆரம்பத்தில் 05/04/2019 வரை தான் கவிதை அனுப்ப வேண்டிய அவகாச காலமாக இருந்தது. 

10/04/2019 வரை நீடிக்கப்பட வேண்டிய காரணம் என்னவென்றால் எங்களுக்கு அதிகபட்ச நேயர்கள் அதன்பின் தான் தமது ஆக்கங்களை அனுப்பினார்கள். அனைவருக்கும் ஒரு வாய்ப்பு அளிக்கவே இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டதின் நோக்கம் என அறியத்தருகிறோம்.

மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயம் நூற்றாண்டுநிறை விழாவினை முன்னிட்டு மாதகல் நெற் இணையத்தினால் நடாத்தப்படுகின்ற கவிதைப்போட்டிக்கு பழைய மாணவர்கள் அல்லது கற்பித்த ஆசிரியர்கள் உங்கள் கவிதைகளை அனுப்பவதற்கான கால அவகாசம் எதிர்வரும் புதன்கிழமை 10/04/2019 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதை அன்புடன் அறியத்தருகிறோம்.
நேரம் மிகவும் பொன்னானது ஆகையால் உங்களுக்குள்  ஒளிந்திருக்கும்
 உங்கள் திறமைகளை கவிதை மூலம் வடித்து இவ் உலகத்திற்கு பாடசாலையின் பெருமையை வெளிப்படுத்துங்கள்.
மறந்திடாதீர்கள் இணையத்தள முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்டபின் அதிகவிருப்புகளை(like) வாங்கும் முதல் கவிதைக்கு மிகப்பெறுமதியான நினைவுப்பரிசிலும் வழங்கப்பட்டு , பாடசாலையால் வெளியிடப்படவுள்ள நூற்றாண்டு மலரிலும் இடம்பெறும் என வாசகர்களுக்கு அன்புடன் அறியத்தருகிறோம்.
எழுதுங்கள் ஓர் கவிதை உங்களுக்கு அரிவரி கற்றுத்தந்த உங்கள் பள்ளியின் வெற்றிக்காக.


உங்கள் கவிதைத்தொகுப்பை நீங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி  ( Mathagal.net@Gmail.com )  மூலம் அல்லது 0033751011981 Viber மூலம்,  https://www.facebook.com/mathagal1net  என்ற எமது பேஸ்புக் முகவரியிலும் (Message) மூலம் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.   உங்கள் நல் ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றோம்.


 

Share:

No comments:

Post a Comment